சோசியல் மீடியாவில் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உலகளவில் பிரபலமாகி வரும் பாடல் ‘கச்சா பாதாம்’.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் .
இந்த பாடலை பாடியவர் மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தை சேர்ந்த ‘பூபன் பத்யாகர்’
‘பூபன் பத்யாகர்’ அவர் கிராமத்தில் சைக்கிளில் கச்சா பாதம் என பாடி கொண்டே வேர்க்கடலை விற்று வருகின்றார்.
‘பூபன் பத்யாகர்’பாடி கொண்டு இருக்கும் போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் இதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்
சோசியல் மீடியாவில் வைரலாகியதை பார்த்த Ron-E & Pragya Dutta இருவரும் பூபன் பத்யாகரை அழைத்து இந்த பாடலை பாட வைத்தனர்.
பூபன் பத்யாகர் குரலிலேயே பாடவைத்து ஆல்பம் பாடலாக வெளியிட்டனர்
பின்னர் பூபன் பத்யாகரின் கச்சா பாதாம் ஆல்பம் பாடலாக உலகளவில் ட்ரெனாகியது.