HomeTechnologyIRCTC ஏன் பயணிகளுக்கு விருப்பமான சீட்டை புக் செய்யும் வசதியை வழங்கவில்லை.? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

IRCTC ஏன் பயணிகளுக்கு விருப்பமான சீட்டை புக் செய்யும் வசதியை வழங்கவில்லை.? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

[ad_1]

நம் நாட்டு போக்குவரத்து அமைப்பின் உயிர்நாடி என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷனை (IRCTC) நிச்சயமாக குறிப்பிடலாம். ஏனென்றால் நாடு முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வெளியூர் மற்றும் வெளிமாநில பயண தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய பங்கை கொண்டு உள்ளது இந்தியன் ரயில்வே.மக்கள் தங்கள் ரயில் பயணங்களை மிகவும் எளிதாகவும், வசதியாகவும் மேற்கொள்ள பல அம்சங்களை வழங்குகிறது IRCTC. மேலும் ரயில் பயணிகளின் பயண தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ஆனால் IRCTC பற்றிய ஒரு விஷயம் பல சமயங்களில் மக்களை எரிச்சலடைய செய்கிறது. மேலும் அதற்கான காரணத்தை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவென்றால் தியேட்டர்கள் அல்லது பேருந்துகளில் நமக்கு தேவையான சீட்டை புக்கிங் செய்வது போல ரயில் பயணங்களை மேற்கொள்ளும் போது நாம் விரும்பிய சீட்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பது தான். ஆனால் IRCTC ரயில்களில் ஏன் இந்த விருப்பம் நமக்கு கிடைக்கவில்லை என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்…

IRCTC ரயில்களில் சீட்களை தேர்வு செய்ய ஏன் அனுமதி இல்லை என்பதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்பக் காரணம் இயற்பியல் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம், ரயிலில் சீட்ஸ் புக் செய்வது, தியேட்டரில் சீட்களை புக்கிங் செய்வதை விட வித்தியாசமானது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது தியேட்டர் ஒரு ஹால், எங்கும் நகராது. ஆனால் அதேசமயம் ரயில் என்பது நகர கூடிய ஒன்று. எனவே ரயில்களில் பாதுகாப்புக் கவலை மிக அதிகம்.

இந்திய ரயில்வேயின் டிக்கெட் புக்கிங் சாஃப்ட்வேர் ஒரு ரயிலில் பயணிகள் சுமையை (Passenger load) சமமாக விநியோகிக்கும் வகையில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ரயில்கள் தொடர்ந்து செல்ல கூடிய வாகனம் என்பதால் ஐஆர்சிடிசி அல்காரிதம், ஓடும் ரயிலில் பயணிகள் சுமையை சமமாக சமன் செய்ய சீட்களை தானாகவே ஒதுக்குகிறது. விஷயங்களை உங்களுக்கு தெளிவாக புரிய வைக்க இங்கே உதாரணத்தை பார்க்கலாம்.

ஒரு ரயிலில் S1, S2 S3… S10 என்ற எண் கொண்ட ஸ்லீப்பர் கிளாஸ் கோச்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு கோச்சிலும் 72 சீட்கள் இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது ஒருவர் முதலில் டிக்கெட்டை புக்கிங் செய்யும் போது, ​​சாஃப்ட்வேரானது S5 போன்ற நடு கோச்சில் ஒரு சீட், 30-40 க்கு இடையில் நம்பர் கொண்ட நடு சீட் மற்றும் முன்னுரிமையாக லோயர் பெர்த்களை ஒதுக்கும். ரயில்வே முதலில் அப்பர் பெர்த்களை விட லோயர் பெர்த்களை நிரப்புகிறது.

ரயில் அதன் வழித்தடத்தில் பயணிக்கும் போது ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் ஒரே அளவு பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் சாஃப்ட்வேர் செயல்படுகிறது. எப்போதுமே ரயில் சீட்களின் ஒதுக்கீடு நடு சீட்களில் இருந்து தொடங்குகிறது. பின் அது கோச்சின் கதவுகளுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு செல்கிறது. இந்த வழியில் தான் IRCTC சாஃப்ட்வேரானது அதன் அல்காரிதம் மூலம் ரயிலின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதிகபட்ச மையவிலக்கு விசை (maximum centrifugal force) காரணமாக ரயில் தடம் புரளும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். எனவே தான் இந்திய ரயில்வே சீட் புக்கிங் பொறுப்பை சாஃப்ட்வேர் மூலம் மேற்கொண்டு ரயிலின் அனைத்து கோச்களிலும் பயணிகள் சமமாக இருப்பதை உறுதி செய்கிறது.

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular