HomeTechnologyஜிமெயில் மோசடி பணம் திருட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி

ஜிமெயில் மோசடி பணம் திருட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி

[ad_1]

2021ம் ஆண்டில் கொரோனா பெருந்தோற்றின் 2வது அலை தீவிரமடைந்து வந்த அதே சமயத்தில், இணையத்தில் மற்றொரு ஆபத்தான விஷயம் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. அதாவது லேட்டஸ்ட் தொழில்நுட்பம் குறித்து தெரியாத அப்பாவி மக்களை குறிவைத்து நூதன முறையிலான ஆன்லைன் மோசடிகள் அரங்கேற்றப்பட்டன.அதில் குறிப்பாக மின்னஞ்சல் மூலமாக நடந்தப்பட்ட ஆன்லைன் மோசடிகள் ஏராளம். அதாவது ஒரு குறிப்பிட்ட யூஸருக்கு அவரது Gmail, Yahoo, Outlook ஆகிய ஏதாவது ஒரு தளத்தில் இருந்து மெயில் ஒன்று அனுப்பப்படும், அதில் DHL மூலமாக உங்களுக்கு ஒரு டெலிவரி வந்துள்ளதாகவும், அதனை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையை செலுத்தும் படியும் கோரிக்கை வைக்கப்படும். இது உண்மையானது தானா என்பதை கண்டுபிடிப்பது சற்றே கடினமானது என்பதால், ஆன்லைன் குறித்து அதிகம் அறிந்திருக்காத நபர்கள் எளிதில் பணத்தை அனுப்பிவிடுவார்கள். இந்த மோசடியை கண்டறிவது கடினமானது என்றாலும், மோசடி செய்பவர்களிடமிருந்து இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டு வாசலிலேயே வந்து பொருட்களை டெலிவரி செய்வார்கள் என்பதால், பலரும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். அப்படி டெலிவரி தொடர்பாக ஏதாவது மின்னஞ்சல் அல்லது குறுச்செய்தி வந்தால் அதனை ஆராய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் கிடையாது.

தி எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஜிமெயில் மோசடியானது பாதிக்கப்பட்டவருக்கு DHL அனுப்பிய மின்னஞ்சலைப் பெறுவதில் இருந்து தொடங்குகிறது. உண்மையாகத் தோன்றும் வகையில் மின்னஞ்சலில் உள்ள பெயரால் பாதிக்கப்பட்டவரை மின்னஞ்சல் முகவரியிடுகிறது. DHL இந்த ஊழலில் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்றாலும், நம்பத்தகுந்ததாக தோன்றுவதற்காக மோசடி செய்பவர்கள் அப்பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்.

Gmail 1

மின்னஞ்சலில், பயனருக்கு ஒரு ஆர்டருக்கான கண்காணிப்பு ஐடி கொடுக்கப்பட்டு, அஞ்சல் பெறுநருக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பை DHL வந்துள்ளதாக அறிவிக்கும். பேக்கேஜ் டெலிவரிக்கு திட்டமிடப்படுவதற்கு முன், நிறுவனம் முகவரியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து, முகவரியை உறுதிப்படுத்த பயனர் கிளிக் செய்ய வேண்டிய இணைப்பும் கொடுக்கப்படும்.

முகவரியை உறுதிசெய்த பிறகு, நிர்வாகக் கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்பார்கள். பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்துவதன் மூலமாக மோசடி செய்பவர் அவர்களின் முழுப் பெயர், கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் முகவரியைச் சேகரிக்க முடியும், பின்னர் அந்த நபரின் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட மெயில் உங்களுக்கும் வந்திருந்தால், இல்லை இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் சிக்கக்கூடாது என நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

ஜிமெயில் மோசடியில் இருந்து எஸ்கேப் ஆவது எப்படி?

1. உங்களுக்கு டெலிவரி சம்பந்தமாக ஏதாவது மின்னஞ்சல் வந்தால், அதன் இணைப்பு URL ஐ சரிபார்க்கவும், அதில் DHL க்கு பதிலாக BHL என்றிருக்கும்.

2. நீங்கள் இணையதளத்திற்குச் சென்றவுடன் அதே எழுத்துப்பிழையையும் காணலாம். மேலும் DHL நிறுவனத்தின் போட்டி நிறுவனமான UPS நிறுவனத்தின் லோகோ உள்ளே இருப்பதைக் கண்டால் நிச்சயம் அது போலி மின்னஞ்சல் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

3. எந்தவொரு டெலிவரி சேவையும் வாடிக்கையாளரை நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்தும்படி வலியுறுத்துவது இல்லை, எனவே உங்களிடம் ஏதேனும் கட்டணம் கேட்கப்பட்டால், இது நிச்சயமாக ஒரு மோசடி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் பணம் செலுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள்.

4. உங்களின் அனைத்து ஆர்டர்களையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும் மேலும் இது போன்ற மின்னஞ்சலை நீங்கள் கண்டால், முதலில் நீங்கள் பொருட்களை ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் பேசி உறுதிபடுத்திக் கொள்ளவும்.

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,250FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular