HomeTechnology15 நிமிடங்களில் 100% சார்ஜ் - புதிய OnePlus Nord 2T 5G சிறப்பம்சங்கள் இதோ!

15 நிமிடங்களில் 100% சார்ஜ் – புதிய OnePlus Nord 2T 5G சிறப்பம்சங்கள் இதோ!

[ad_1]

80W சூப்பர்வூக் (SuperVooc)மற்றும் சக்திவாய்ந்த புதிய எஸ்ஓசி (SoC) உடன் ஒன்பிளஸ் நார்ட் 2டி 5ஜி (OnePlus Nord 2T 5G) விரைவில் வரவிருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.OnePlus ஆனது OnePlus Nord 2T 5G எனப்படும் ஒரு மிக முக்கியமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பிரபலமான Nord 2 க்குப் பிறகு வரும் Nord 2T, பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இன்று 30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும் மிகவும் பிரபலமான ஃபோன்களில் Nord 2 ஒன்றாகும், மேலும் இந்த ஃபோன் அதன் மதிப்பு மற்றும் கேமரா சிறப்பம்சங்களுக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. Nord 2 க்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு வரும் Nord 2T, பல பயன்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

தன் வெற்றிகரமான ஃபார்முலாவை மேலும் மேம்படுத்தியுள்ளது

Nord வரிசையில் உள்ள முந்தைய ஃபோன்களைப் போலவே, OnePlus ஆனது அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருந்து முதன்மை அம்சங்களைப் பெற்று, தனது பழைய ஃபார்முலாவை மேம்படுத்தி மிக எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் அம்சங்களைத் தொகுத்துள்ளது.

இந்த ஆண்டு ஃபோனின் அம்சங்கள் கணிசமான அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. முதலில், 15 நிமிடங்களில் ஒரு நாளிற்குத் தேவையான சார்ஜ் செய்யப்படும் என்ற வாக்குறுதியுடன் உங்கள் சார்ஜர் 65W இலிருந்து 80W SuperVoocக்கு (OnePlus 10 Pro இலிருந்து பெறப்பட்ட அம்சம்) மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக, நீங்கள் புத்தம் புதிய MediaTek Dimensity 1300 SoC ஐப் பெறுகிறீர்கள், இது செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஏற்கனவே சிறப்பாக இயங்கும் 50 MP Sony IMX 766 சென்சாரின் செயல்திறனை அதிகப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட AI அம்சங்களையும் (OnePlus 10R இல் பார்த்தது) கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட HDR மற்றும் குறைந்த-ஒளி செயல்திறனுக்கு உறுதியளிக்கும் OnePlus யின் புதிய சிப்பிற்கு நன்றி!

கூடுதலாக, Dimensity 1300 SoC ஆனது கேமிங்-சென்ட்ரிக் ஆப்டிமைசேஷன்களை ஆதரிக்கிறது, இதில் குறைந்த-லேட்டன்சி ஆடியோ மற்றும் வேகமான காட்சிகளுக்கான சிறந்த ஆதரவு அடங்கும். நிலையான OIS, 4K HDR ரெக்கார்டிங், HDR10+ பிளேபேக் மற்றும் பலவற்றிற்கான ஆதரவும் நிச்சயமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இறுதியாக, இந்த போன் OxygenOS 12.1 உடன் அறிமுகப்படுத்தப்படும், இது வேகமான ஆப் லோடிங், சிறந்த கேமிங் பயன்முறை மற்றும் பல வாழ்க்கைத் தர மேம்பாடுகள் உள்ளடங்கிய அம்சங்களைக் கொண்டு வருகிறது. திரையின் அளவும் ஒட்டுமொத்த வடிவமைப்பும் முந்தைய மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus ஆனது “சிக்னேச்சர் OnePlus அனுபவத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற” இவ்வாறு தேர்வுசெய்தால், நாமும் இதைதான் தேர்ந்தெடுப்போம்!

இத்தகைய அம்சங்கள் நிறைந்த இந்த ஃபோனை நாம் எவ்வாறு வாங்கலாம்?

OnePlus நிறுவனம், இந்த போன் ஜூலையில் வரும் என்றும், இது Amazon மற்றும் OnePlus யின் ஆன்லைன்மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும் என்றும் கூறுகிறது. விலை பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இங்கே உள்ள அறிவிப்பு பட்டனை அழுத்தி நீங்கள் OnePlus Nord 2T 5G ஐ வெல்லலாம். ஒரு வெற்றியாளர் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஃபோனை ரிடீம் செய்யக்கூடிய கூப்பன் அவருக்கு வழங்கப்படும். “நோ யுவர் நோர்டு” என்னும் போட்டியும் உள்ளது, இதில் பங்கேற்று நீங்கள் இந்த ஃபோனை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.  குறிப்பாக Red Cable Plus உறுப்பினர்களுக்காக, அறிமுக நேரத்தில் ஏராளமான சலுகைகள் கிடைக்கவிருக்கின்றன, எனவே அவற்றை தவறவிடாதீர்.

83570372

முதலில் வெளிவந்த ஒன்பிளஸ் நார்ட்.

இந்த ஃபோனின் அறிமுகம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற OnePlus India வின் Instagram மற்றும் Facebook பக்கங்களைப் பின்தொடர மறக்காதீர்கள்.

Promoted Content 

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular