HomeTamilnaduசென்னையில் Dr. Reddy's நிறுவனத்தின் பெயரில் பண மோசடி மற்றும் தகவல் திருட்டு

சென்னையில் Dr. Reddy’s நிறுவனத்தின் பெயரில் பண மோசடி மற்றும் தகவல் திருட்டு

சென்னையில் GLOBE BHP EXIM PRIVATE LTD என்ற கம்பெனி பெயரில் போலியாக அமைவிடம் அமைத்து வேலையில்லாமல் இருப்பவர்களிடம் WORK FROM HOME மூலமாக அதிகமான சம்பளம் தருவதாக கூறி பத்தாயிரத்துக்கும் அதிகமானோரிடம் தலா 350 ரூபாய் மற்றும் நிறுவன மடிகணினிஉடன் வேலை செய்ய 1750 ரூபாய் பெற்றதாக தெரிகிறது.

சுமார் 1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்தது தெரிய வந்திருக்கிறது. சமீபகாலமாக ஆன்லைன் மோசடி அதிகமாய் இருப்பது பொதுமக்களிடம் ஒருவித பயத்துடன் கலந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போலி கம்பெனி முதலில் Linkedin வாயிலாக வேலை வாய்ப்பு உள்ளதாக பதிவு செய்து அதன் மூலம் ஒருவரை தேர்ந்தெடுத்து டீம் லீடராக அறிவித்து இது புது கம்பெனி என்பதால் உங்களுக்கு கீழே 30 பேரை தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துதல் என்று கட்டளையிடுகிறது. அவர்களும் இது நிஜ கம்பெனியா என்று ஆராயாமல் 30 நபர்களை தேர்ந்தெடுத்து ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து வழி நடத்துகிறார்கள். ஏராளமான டீம் லீடர் கள் Linkedin மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இதனை செய்கின்றனர். சென்னை மட்டுமில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த மோசடிக் கும்பல் திருட்டு வேலையை செய்திருக்கிறது.

டீம் லீடர் மூலமாக அந்த முப்பது பேரிடமும் ஆதார் எண் மற்றும் பேன் நம்பர் வாங்க பெற்று விர்ச்சுவல் வங்கி எண் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். பின்பு ஆஃபர் லெட்டர் என்ற பெயரில் சம்பள விவரத்துடன் அடங்கிய ஒரு தகவல் கோப்பை வேலைக்கு சேரும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கின்றனர். சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிறுவனத்தை நம்பி பணத்தை அனுப்பியுள்ளனர். இதிலென்ன அவலம் என்றால் Human resource team அமைத்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒன்றுமறியா நபர்களிடம் டீம் லீடர் என்ற பெயரில் தலா 2,500 ரூபாய் பெற்றுள்ளனர். இதில் என்ன வருத்தப்படக்கூடிய விஷயம் என்றால் இந்த மோசடி கும்பல் பொதுமக்கள் தகவலை திருடி உள்ளது தெரியவந்துள்ளது.

Drs.Reddy Screen Shot 1
Software screen shot – Dr. Reddy’s logo mentioned in software given by GLOBE BHP EXIM PRIVATE LTD

Dr. Reddy’s என்ற எம் என் சி நிறுவனத்தின் சாப்ட்வேர் என்று சொல்லி கணினியில் இன்ஸ்டால் செய்ய வைத்து வேலை செய்து வந்துள்ளது. அந்த சாப்ட்வேரில் பொதுமக்களின் ஆதார் எண், பேன் நம்பர் மற்றும் தொலைபேசி எண்,மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் அடக்கியுள்ளது அந்த இணையதளம். சுமார் லட்சக்கணக்கான பொது மக்களின் முழு தகவல் அடங்கிய தளம் போன்று உள்ளது. இந்த தகவல் திருட்டு Dr. Reddy’s என்ற எம்என்சி நிறுவனத்தின் பெயரில் நடந்துள்ளது. அந்நிறுவனத்தின் தொடர்புடைய யாரோ இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தப் போலி தளத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் ஊதியம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் ஊழியர்கள் HR ரிடம் இது பற்றி கேட்ட பொழுது சரிவரப் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இப்பொழுது கம்பெனியின் பெயரில் உள்ள அனைத்து மொபைல் எண்களும் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

பொது மக்களே ஊதியம் அதிகம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை சொல்லி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.

இந்த மோசடிக் கும்பல்கள் குறி வைப்பது வேலை இல்லாமல் கஷ்டப்படும் இல்லத்தரசிகளை WORK FROM HOME என்ற பெயரில் நம்பவைத்து மோசடியில் ஈடுபடுகிறது. விழிப்புணர்வுடன் இருங்கள் மக்களே!!!!!

RELATED ARTICLES

5 COMMENTS

  1. ellam sare antha company proper ah rigister panni tha start pannirukkaga athu government approve panna company nnu clear ah erukku epde patta edathulla ellam proper panna anga yarum support illmala pannugga ethu la pakkum pothu government kodukra ellathanum namba mudeuma ethalla enga poi solrathu

  2. நானும் இதில் ஏமாந்த ஒருவன்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular