HomeNewsசிவா எஸ். வெற்றிவேல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சிவா எஸ். வெற்றிவேல் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எஸ். ஆர். சர்வீஸ் சென்டர் உரிமையாளரும், சயான் கோலிவாடா பா. ஜ. க. துணைத் தலைவரும், இந்தியப் பேனாநண்பர் பேரவை இணைச்செயலாளரும், விஜய் சொசைட்டி தலைவருமான சிவா எஸ். வெற்றிவேல் பிறந்தநாள் விழா இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா.கருண் அவர்கள் தலைமையில்,   கோலிவாடா மாடா காலனி எஸ். ஆர். சர்வீஸ் சென்டர் வளாகத்தில் நேற்று மாலை 7.30 மணிக்கு  மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராகுல் செவாலே,      சட்டமன்ற மேலவை உறுப்பினர் திரு. பிரசாத்லாட், பாஜக. போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் திரு. கராத்தே ஆர். முருகன், சிவசேனா சாக்கா பிரமுக் திரு.கஜானன் பாட்டீல்,   பம்பாய் தென்னிந்திய ஆதி திராவிட மகாஜன சங்க தலைவர் திரு கே. வி. அசோக்குமார், மும்பை தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் திரு. பி. எஸ். பட்டதேவர், இந்தியப் பேனாநண்பர் பேரவை பொதுச்செயலாளர் ஜெ.ஜாண் கென்னடி,  பொருளாளர் கோ. செல்லத்தம்பி,  மலாட் தமிழர் நலச்சங்க தலைவர் எல். பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

சிவா பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார், விஜய் சொசைட்டி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர், இந்நிகழ்ச்சியில்  பா. ஜ. க. பிரமுகர் சி. வி. நடேசன், சயான் கோலிவாடா மகளிரணி தலைவி மாலதி, 179 வது வார்டு பா.ஜ.க செயலாளர் லட்சுமி, லதா மணிமாறன், கொலாபா பன்னிர், சரவணன், பெருமாள் தேவேந்திரர் , தேசியவாத காங்கிரஸ் உதவிதலைவர் அனில்மோரே, கச்ருயாதவ், இந்தியப் பேனாநண்பர் பேரவை, துணைத்தலைவர் பா.சதீஸ் குமார்,செயற்குழு உறுப்பினர் சு. பாஸ்கர்,  பேரவை உறுப்பினர்கள் கே. ரவி, ஈ.குமார், ந. முத்துகுமார், மு. ராஜசேகர், கே. ராஜா, டி. மாரியப்பன்,  திருமதி ப. கோமதி, திருமதி  சக்தி சித்ரா ஆகியோர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும், நினைவு பரிசு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சிவா எஸ். வெற்றிவேல் நன்றி தெரிவித்தார். விருந்து நிகழ்வுடன் விழா இனிதே நிறைவுற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
1,186FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page