HomeNews2021 ல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த பிரபலங்கள் - ஒரு பார்வை

2021 ல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த பிரபலங்கள் – ஒரு பார்வை

உலகம் முழுவதும் இணையத்தில் மக்கள் எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தெரியாத, புரியாத செய்திகளை மக்கள் யாரிடமும் கேட்பதில்லை. அப்படித் தேடுவதற்கு அவர்கள் பயன்படுத்துவது கூகுள் தளத்தைத்தான். கூகுள் செய்தல் (கூகுள் பண்ணுதல்) எனும் சொல்லாடலே உருவாகி இருக்கிறது. இந்த வகையில் 2021ம் ஆண்டில், இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட, பரபரப்பாகப் பேசப்பட்ட 10 நபர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்!

10.நடாஷா தலால்

நடாஷா தலால் இந்தியாவின் பிரபல ஃபேஷன் டிசைனர். நியூயார்க்கில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஃபேஷன் டிசைனிங் படித்தவர்.படிப்பை முடித்து இந்தியா வந்ததும் இவர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது உன்னதமான, நேர்த்தியான, தனித்துவமான, எம்பிராய்டரி மற்றும் அலங்காரங்களால் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள் மிகவும் புகழ்பெற்றவை, பலராலும் விரும்பி அணியப்படுகின்றன. ஹிந்தி பட நடிகரான வருண் தவான் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

9.சுஷில்குமார்

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர்தான்  சுஷில் குமார். 2012 ல் லண்டன் ஒலிம்பிக்ஸில் நடந்த துவக்க விழாவில் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றவர். மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா என்பவரைக் கொலைசெய்ததால் பரபரப்புச் செய்தியானார். தலைமறைவானதால் போலீசாராலும், அதனால் இணையத்திலும் அதிகம் தேடப்பட்டவர் ஆனார்.

8. பஜ்ரங் புனியா 

பஜ்ரங் புனியா இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில்  ஜாஜ்ஜாரில்  பிறந்த ஒரு மற்போர் வீரர் ஆவார்.  2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், 7 ஆகஸ்டு 2021 அன்று ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்ததால் இந்திய அளவில்  ட்ரெண்டிங் ஆனார்.

7.பி.வி. சிந்து

புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பி.வி.சிந்து. இந்திய இறகுப்பந்தாட்ட வீர     ரான இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகஸ்டு 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றதால் ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.

6. விக்கி கௌசல்

விக்கி கௌசல் இந்தி படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளவர்.நடிகை காத்ரினா கைப்பைச் சமீபத்தில் திருமணம் செய்ததால் தற்போதைய ட்ரெண்டிங்கிலும் இருப்பவர்.ஃபோர்ஃப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் 2019 என்னும் பட்டியலில் வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. எலான் மஸ்க்

எலான் மஸ்க் (Elon Musk) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர். டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரரான இவர்,டெஸ்லாவின் பங்குகளின் முன்னேற்றத்தால் ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி  உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரானார் எலோன் மஸ்க்.இதனால் பலராலும் தேடப்பட்ட ட்ரெண்டிங் நபரானார்.

4. ராஜ் குந்த்ரா

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இவரது கணவர்தான் ராஜ் குந்த்ரா. ராஜ் குந்த்ரா ஹாட்ஷாட் என்ற மொபைல் ஆப் மூலம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார்.இதனால் 2021ல் பரபரப்பாகத் தேடப் படுபவராக ஆனார்.

3.ஷெஹ்னாஸ் கில்

ஷெஹ்னாஸ் கில் திரைப்படங்கள், சின்னத்திரை இவற்றில் நடிப்பவர், அதுமட்டுமில்லாமல் பாடகி,மாடலென பன்முகத் தன்மை கொண்டவர்.பிக் பாஸ் 13 ல் பங்கேற்றவர்.கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு சமுக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுபவர்.மறைந்த நடிகர்  சித்தார்த் சுக்லாவோடு இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

2.ஆர்யன் கான்

பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆரியன்கான். நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.இதனால் இவர் மிகவும் பரபரப்பாகத் தேடப்பட்டார்,போலீசாலும் தேடப்பட்டார். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

1.நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா இந்திய ஈட்டி எறிதல் வீரர். இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரியாகப் பணிபுரிபுவர். டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.தங்கமகன் என அனைவராலும் பாராட்டப்படும் நீரஜ் சோப்ராவின் பிறந்தநாள் டிசம்பர் 24 அன்று,அவரது ரசிகர்கள் HBD நீரஜ் சோப்ரா எனப் பதிவிட்டு கொண்டாடியது ட்ரெண்டிங் ஆனது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular