HomeHealthஉண்பதால் குறையும் உடல் எடை | நார்ச்சத்து உணவுகள் | Fiber Rich Foods In...

உண்பதால் குறையும் உடல் எடை | நார்ச்சத்து உணவுகள் | Fiber Rich Foods In Tamil

“பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா? மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா?”  என்பது வைரமுத்துவின் ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ உள்ள வரிகள். மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டையும் போக்கவல்ல இன்மருந்துதான் நார்ச்சத்து உணவுகள். இவை நம் உடல் ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் பிரச்சினைகள் பலவற்றிற்குத் தீர்வாகவும், பல நோய்கள் வராமல் காக்கவும் உதவுபவை இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள். அவை தரும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுவது நார்ச்சத்து. நீரில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து என இது இரண்டு வகைப்படும். 

கரையும் நார்ச்சத்துள்ள உணவுகள் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. நம் உடல் கொலஸ்ட்ராலை உட்கிரகிப்பதை குறைக்கிறது. இவை பித்த உப்பு, கொழுப்பு அமிலங்களை பஞ்சுபோல் உறிஞ்சி, மலமாக வெளியேற்றுகிறது. இதனால் கொழுப்பினால் உண்டாகும் இதய நோய்கள் உட்பட பலவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. நார்ச்சத்துகளிலுள்ள பெதின், பிசின் இவற்றை உணவுடன் சேர்த்து, உண்டபிறகு சோதித்துப் பார்த்ததில் , உணவிற்குப் பின்னான, ரத்த ஓட்டத்தில், குளுக்கோசின்  அளவு மிகவும்  குறைந்திருந்ததை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு  நோயாளிகளின், சர்க்கரை செரிமானத்தை மந்தப்படுத்துவதால், திடீரென்று அதிகமாகும் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

கரையும் நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. கலோரியேற்றம் தானே உடல் பருமனால் அவதிப்படும் அனைவருக்குமான பிரச்சினை. அப்பிரச்சினை, நார்ச்சத்து உணவுகளால் குறைகிறது. நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர் அதிக தண்ணீர் அருந்துவதன்மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

கரையாத நார்ச்சத்தானது நாம் உட்கொள்ளும் நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையையும் கொடுத்து. மலத்தை மிருதுவாக்குகிறது.  இதனால் மலம் சுலபமாக வெளியேறி மலச்சிக்கல் பிரச்சினை தீர்கிறது. மலச்சிக்கல் இல்லாவிடில் வயிறு, குடல்களில் உண்டாகும் அழற்சிகள் தடுக்கப்படுகின்றன. இதனால் குடல்களில் புற்றுநோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் குறைகின்றன. நார்ச்சத்தானது செரிமான உறுப்பு மண்டலத்தில் பயணிக்கும் போது, நீரை இழுத்து அளவில் பெரிதாகும். இதனால், உண்ட உணவின் பருமன் அதிகமாகி, குடல் வழியாக நீண்ட நேரம் பயணிக்கிறது. இதனால் பசிக்கும் உனர்வு எடுப்பதில்லை. எனவே நொறுக்குத்தீனிகள் உண்ணும் பழக்கம் குறைந்து உடல் எடை குறைகிறது.

ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம். இவை நம் வயிற்றை வேகமாக நிரம்பச் செய்யும். அது, அடிக்கடி பசி எடுக்கும் உணர்வைத் தடுக்கும். நார்ச்சத்து, கொழுப்புடனும் சர்க்கரையுடனும் சேர்ந்து உணவுக்குழாயில் பயணம் செய்து, உடலில் உள்ள கலோரிகளைக் குறைத்து, உடல்நலனைப் பாதுகாக்கும்.

எளிதாக செரிக்கக்கூடிய, மலச்சிக்கலை ஏற்படுத்தாத உணவு வகைகளை சாப்பிடுவதால் மனதின் அழுத்தம் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படிப் பட்ட தன்மையைக் கொண்டுள்ளவை நார்ச்சத்து உணவுகளே!

கீரைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு,பனங்கிழங்கு, காய்கறிகள், எண்ணெயில் பொரிக்காமல் நீராவியில் வேகவைத்த மீன், கோழி, பாதாம் முதலான நட்ஸ், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி,புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள், கடலை வகைகள், முட்டையின் வெள்ளைப் பகுதி, அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியங்களான சாமை, கேழவரகு, குதிரைவாலி, வரகு, தினை சோளப்பொறி (சிறுதானியங்களில் நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன), கோதுமை ரொட்டி, கேக், பிஸ்கட், பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானியங்கள், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோன்ற நன்மை பயக்கும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டு, உடல் எடையைக் குறைத்து, மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டுமின்றி நலமோடு வாழ்வோம்!

Frequently Asked Questions

Which baby food has fiber?

All fruits and vegetables, including oats, have the maximum fiber.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
1,205FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page