HomeHealthஆயுளை அதிகரிக்கும் ஆயில் இல்லாப் பொரித்த உணவுகள் – ஏர் ப்ரையர்

ஆயுளை அதிகரிக்கும் ஆயில் இல்லாப் பொரித்த உணவுகள் – ஏர் ப்ரையர்

சமோசா, கட்லெட், பீட்சா, சிக்கன், பிரெஞ்ச் பிரைஸ், மாமிச வகைகள், மீன், கேக், மஃப்பின் இதையெல்லாம் பிடிக்காதவர்கள் மிகவும் குறைவே.  உடல் எடைக்குறைப்பு, உணவுக்கட்டுப்பாடு என நாம் உடல் நலனில் அக்கறை காட்டும்போது, நமது கண்ணில் படும் இத்தகைய பொரித்த உணவுகள் மனதில் சஞ்சலத்தைக் கிளப்பிவிடும். கொஞ்சம் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது என நமக்கு நாமே ஆறுதல் சொல்லப் பொரித்த உணவுகளை உள்ளே தள்ளுவோம். அதனால் உடல் எடை கூடும். பொரித்த உணவுகள்தான் அனைவருக்குமே பிடித்தமானது என்பதை மறுக்க முடியாது. ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் அதே சமயம் அது நமக்கு பிடித்த பொரித்த உணவாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு என்ன வழி என்றால் அதுதான் ஏர் ஃப்ரையர்.

அது என்ன ஏர் ஃப்ரையர்?

கிட்டத்தட்ட குக்கர் போன்ற வடிவில், சூடான வெப்பக்காற்று சுழன்று வீசுவதால் பொரித்ததைப் போலவே மொறுமொறுப்புடன் சுவைக்கக்கூடிய உணவுகளைச் சமைக்க உதவும் சமையலறை உபகர்ணம்தான் இந்த ஏர் ஃப்ரையர் (Air Fryer). இதைக் காற்றுப் பொரிப்பான் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இதில் என்ன சிறப்பு?

இது எண்ணெய்ப் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது. குறைவான அளவு எண்ணெயில் சமைக்கலாம் அதாகப்பட்டது வடிவேல் சொல்வதுபோல் மழைச்சாரல் போலத் தூறினாலே போதுமானது. இன்னும் சொல்லப்போனால் 90% குறைவான எண்ணெயில் கிட்டத்தட்ட அதே சுவையில் வறுக்க உதவுகிறது. இதில் கொழுப்பு பற்றிய கவலை இன்றிச் சமைத்து குதூகலமாய் உண்ணலாம். சிறிய அளவில் இருப்பதால் நாம் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது.

உணவு வெந்தவுடன் சேரும் தேவையில்லாத கசடுகள், எண்ணெய்ப்பசை போன்றவை இதில் கீழே இருக்கும் ஒரு தட்டில் சேர்கின்றன. எனவே அதை எடுத்து சுத்தம் செய்துகொள்ளலாம்.

மிகவேகமாகவும், நேர்த்தியாகவும் சமைக்க கூடியது திறன், மைக்ரோவேவை விட பன்மடங்கு சிறப்பாகவும், வேகமாகவும் செயல்பட கூடிய தன்மை, 2 அல்லது 3 நிமிடங்களிலே சூடாக்கி விடும் திறன், டச் கண்ட்ரோல் பேனல் மூலம் சுலபமாக ஆப்ரேட் செய்து கொள்ளும் வசதி, பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது மற்றும் சுலபமானது,அதிக இடவசதி கொண்டுள்ளதால், குடும்பத்திற்கு தேவையான உணவுகளை எளிதாக சமைக்கும் வசதி இவையெல்லாம் இதன் சிறப்புக்கள்.

என்னவெல்லாம் சமைக்கலாம்?

சமோசா, கட்லெட், பீட்சா, சிக்கன், பிரெஞ்ச் பிரைஸ், மாமிச வகைகள், மீன், கேக், மஃப்பின்,சோளப்பொறி,கடலை.பிரட் டோஸ்ட் என உங்களுக்கு விரும்பியதெல்லாம் சமைக்கலாம். வாழைப்பழம், வாழைக்காய்,உருளைக் கிழங்கு,மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை துண்டுகளாக்கி இதனுள் வைத்தால் அவை டீ ஹைட்ரேட்டிங் முறையில் சிப்ஸ் ஆக உருமாறும். ஏர் ஃப்ரையர் உணவுகள் என்று தேடினால் இணையத்தில் எண்ணற்ற ரெசிப்பிக்கள் வந்து கொட்டுகின்றன.

பொரித்த உணவை,பாதுகாப்பான முறையில் செய்ய உதவும் ஒரு சமையல் சாதனம் இந்த ஏர் ஃப்ரையர் என்ரால் மிகையாது. இங்கே சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும், நம் கைகளில் சிந்தி விடுமோ என்ற பயமில்லாமல் சமைக்கலாம். மற்ற பொரித்த உணவுகளைவிட இதில் செய்யப்படும் உணவுகள் கலோரிகள் குறைந்தவை. எனவே குற்ற உணர்ச்சி இல்லாமல் உண்ணலாம்.

இந்த ஏர் ஃப்ரையர்கள் 3000 ரூபாய் முதற்கொண்டு இணையத்தில் விற்பனையாகின்றன. ஆரோக்கியமான, பாதுகாப்பான சமையல் முறை, கலோரி மற்றும் எண்ணெய் குறைந்த பொரித்த உணவு போன்ற காரணங்களுக்காக ஏர்  ஃப்ரையரை மிக ஆரோக்கியமான சமையலறை உபகரணம் என்றால் மிகையன்று!

சிவ.அறிவழகன்
சிவ.அறிவழகன்
எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular