HomeCinemaமீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?

மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?

[ad_1]

நடிகை மீனாவின் கணவரும் தொழிலதிபருமான வித்யாசாகர் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இள வயதில் ஏற்பட்டுள்ள அவரது மரணம் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வித்யாசாகர் குறித்த சில தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் சிவாஜி முதல் ரஜினிகாந்த் வரை என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா, அதன் பின்னர் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த வகையில் 90 களின் தொடக்கத்தில் ஆரம்பித்த அவரது கதாநாயகிப் பயணத்தில் அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட அனைத்து டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார்.

பல்வேறு மொழிகளில் நடித்துக் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நடிகை மீனாவுக்குக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனது தந்தையின் ஊரான ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் எனும் நபரைத் திருமணம் செய்துகொண்டார் நடிகை மீனா.

meena12009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி இவர்களது திருமணம் ஆர்ய வைஸ்ய சமாஜ் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. திருமணத்துக்குப் பின்னர், திருப்பதிக்கு சாமி தரிசனமும் சென்றது இந்த ஜோடி. திருமணத்தையொட்டி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆந்திராவைச் சேர்ந்தவரான வித்யாசாகர், தொடக்கத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகத் தான் தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர்தான் பெங்களூருவை மையமாகக் கொண்டு பிசினஸில் இறங்கி, தொழிலதிபராக மாறி இருக்கிறார் வித்யாசாகர்.

பொதுவாக நடிகைகள் தங்களது திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பது அரிதாகவே இருந்துவருகிறது. ஆனால் அந்த விஷயத்தில் நடிகை மீனாவும் விதிவிலக்கு என்றே சொல்லலாம். திருமணத்துக்குப் பின்னரும் அவ்வப்போது சினிமாவில் நடித்தே வருகிறார் மீனா.

bbbbbbqஇதற்கு அவரது கணவர் வித்யாசாகரும் பக்கபலம் என்றே சொல்லலாம். மீனா சினிமாவில் தொடர்ந்து நடிக்க தனது சப்போர்ட்டை தொடர்ந்து வழங்கியே வந்துள்ளார் வித்யாசாகர். எல்லாம் நல்லபடியாக போய்கொண்டிருந்த இந்த சமயத்தில்தான் மீனாவின் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக நிகழ்ந்திருக்கிறது அவரது கணவரின் இந்த மரணம்.

இந்தப் பேரிழப்பிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்பதே அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular