HomeCinemaபுஷ்பா வசூல் சாதனையை முறியடித்து முன்னேறும் விக்ரம்

புஷ்பா வசூல் சாதனையை முறியடித்து முன்னேறும் விக்ரம்

[ad_1]

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான பான் இந்தியா திரைப்படமான ‘புஷ்பா’ படத்தின் வசூல் சாதனையை கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் படையெடுத்தனர். வார நாட்களிலும் கூட்டம் அலைமோதியது. படம் வெளியாகி 25 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இன்றும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’.

இந்நிலையில், ரூ.400 கோடியை எட்டியுள்ளது ‘விக்ரம்’. அதேசமயம் பான் இந்தியா படமாக வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் 365 கோடி ரூபாயை வசூலித்தது. ‘விக்ரம்’ அந்த சாதனையை முறியடித்து முன்னேறி வருகிறது.

மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 433 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. தற்போதும் ‘விக்ரம்’ படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவில் ‘சாஹோ’ படத்தின் வசூலையும் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular