HomeCinemaதளபதி 66 டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

தளபதி 66 டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

[ad_1]

‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், மேலும் படத்தில் பிரபல நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, சங்கீதா மற்றும் ஷாம் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் சில முக்கியமான காட்சிகள் ஹைதராபாத்தில் நிறைவு செய்யப்பட்டது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னைக்கு வந்துள்ளது.

சமீபத்தில் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.  முழுக்கமுழுக்க குடும்ப கதையம்சம் நிறைந்த படமாக உருவாகிவரும் இந்த படத்தை தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.  ஜூன்-23ம் தேதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இவரின் படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரது பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளது.

vijayqஅதாவது ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வரும் ஜூன்-21ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு அதன்படி அதிகாரபூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.  இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.  இதேபோல ஏற்கனவே ‘பீஸ்ட்’  படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,250FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular