HomeCinemaடாக்டர் பட்டம் பெற்றார் தளபதி SK ஆதிமூலம்

டாக்டர் பட்டம் பெற்றார் தளபதி SK ஆதிமூலம்

32 –  ஆண்டு அயராத மக்கள் நல பணிக்கு எனக்கு கிடைத்த டாக்டர் பட்டம்

எனது தாய் தந்தையர் சுப்பிரமணி – கேசம்மாள் பெற்றோருக்கும், அவர்கள் இறப்பிற்கு பிறகு பெற்றோராக பாவிக்கும் மக்கள் தலைவர் ரஜினி -லதா ரஜினி ஆகியோருக்கும், கடந்த 32-ஆண்டுகளாக கஷ்டம் நஷ்டம் வேதனை சோதனையிலும் எனக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமளித்து வந்த சாத்தனூர் ஆர் சக்திவேல் எம் மரிய சிலுவை மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் செயலாளர் சிவக்குமார் இராமச்சந்திரன் மகளிர் அணி செயலாளர் தலைமை ஆசிரியை லதா மணிமாறன், மாநில இளைஞரணி செயலாளர் ரஜினி தனவேல் போன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த அரிய விருதினை சமர்பிக்கிறேன்…

IMG 20210331 WA0005
SK Adhimoolam got Doctorate Award

மேலும் இந்த டாக்டர் பட்டம் பெறுவதற்கு உதவி புரிந்த அகில உலக பத்திரிகை ஊடகச் சங்கம் தலைவர் டாக்டர் ஆர். விஜய் ஆனந்த், பொருளாளர் டாக்டர் எம். எல். ரூபன் ஜெர்மானிய, மற்றும் எம்.எல்.ராஜேஷ் ஆகியோருக்கும்,

கோவை மாவட்ட நீதிபதி மற்றும் ரிட்டயர்மென்ட் நீதிபதிகள் கமிஷனர்கள் பொற்கரங்களால் விருது பெற்றதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதன் மூலம் இரண்டு விஷியங்கள் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்

(1) மக்கள் தலைவர் ரஜினி அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க கோரி மனுவை இந்தியா முழுவதும் உள்ள யுனிவர்சிட்டிக்கு மூன்று மணி நேரத்தில் போஸ்ட் ஆபிஸ் ச்சும்மா அதிரும்படி தெறிக்க விட்டோம்.

கடைசியாக காரைக்குடி அழகப்பா பல்கலை கழக துணை வேந்தர் குழு மட்டும் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்து கடிதம் எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த சமயத்தில் தான்

மறைந்த முன்னாள் திமுக எம் பி யும், நாயகன் படத்தின் நாயகனுமான ஜே. கே. ரித்தீஷ் வீண் வம்புக்கு வந்து முதலில் எனக்கு டாக்டர் பட்டம் கொடுங்க பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு கொடுங்க… என்று மிரட்டி உள்ளார்.

அதன் படி செய்தி அறிந்து ஜூனியர் விகடன் வார இதழில் நிருபர் ஷண்முகசுந்தரம் எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

அதற்கு நான் அளித்த பேட்டியில் நடிகர் செந்தில் அவர்களுக்கு கொடுத்த பிறகு முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு கொடுங்க  என்பது போல் உள்ளது என்று தெரிவித்த கருத்து புகைப்படத்துடன் இரண்டு பக்கத்திற்கு செய்தியாக வந்தது இந்த இனிய தருணத்தில் நினைவு கூறுகிறேன்…

பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்பது போல் 2009- ம் ஆண்டு தலைவருக்காக டாக்டர் பட்டம் அடுத்து அவரது தோற்றம் மெழுகு சிலைக்கும் லண்டன் சிங்கப்பூர் அமெரிக்கா மஹாராஷ்டிரா பூனே மியூசியத்திற்க்கும் மனு அனுப்பி உள்ளேன்.

2016 -ம் ஆண்டு பாரத் ரத்னா விருது கிடைக்க பெற வேண்டி மும்பை சிவசேனா எம் பி பிஜேபி மும்பை தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் செம்பூர் & குர்லா எம் எல் ஏ வுக்கும் மனு கொடுத்துள்ளோம்.

இரண்டாவது

முதல் முறையாக சென்னையில் மூன்று நாள் திருவிழாவில் உலக அமைதி திருகோவில் நிறுவன தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரும் இலக்கியவாதியுமான வி ஜி சந்தோசம் சார்பில் அன்றைய தமிழக சபாநாயகர் காளிமுத்து தலைமையில் ஞான ஒளி திருதூதர் என்ற விருதும்,

“”இரண்டாவதாக தேனி மாவட்டத்தில் ஐபிஎல் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் தம்பிரான் சுவாமிகள் பொற்கரங்களால் மனிதநேய மாமணி விருதும்,

வில்லே பார்லே நேருநகரில் நடந்த விழாவில் சிட்டிசன் ஃபார்ம் நிறுவன தலைவர் எஸ் ஏ சுந்தர் பொற்கரங்களால் மக்கள் சேவகன் விருதும்,

செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கலை அரங்கில் கானா உலகநாதன் இசை நிகழ்ச்சியில் தி அசோக் மெமோரியல் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் தனலக்ஷ்மி ஃபைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய சேவா ரத்னா விருதும்,

அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாட்டுங்கா டான் போஸ்கோ அரங்கில் வைத்து நிறுவன தலைவர் ஜோசப் பொற்கரங்களால் தேசிய விருதும்,

ஷண்முகானந்தா கலை அரங்கில் நடந்த விழாவில் அன்றைய மஹாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பொற்கரங்களால் ராஜஸ்ரீ விருதும்,

தாதர் ரவீந்திர நாத் நாட்டியமந்திர் அரங்கில் நடந்த சர்வதேச மனித உரிமை கமிஷன் சார்பில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பொற்கரங்களால் பாரத் கவுரவ் விருதும்,

கிங்சர்கிள் ஷண்முகானந்தா கலை அரங்கில் நடந்த பக்தி ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அய்யா வீரமணிதாசன் பொற்கரங்களால் ஆன்மீக சுடர் விருதும்,

தானா மாவட்டம் உல்லாஹாஸ் நகர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் 25- வது வெள்ளி விழா ஆண்டில்  சமுக நலபணிக்கு தமிழ் எம் எல் எ முன்னிலையில் அய்யன் திருவள்ளுவர் விருதும்,

வேலூர் மாவட்டம் தங்க கோயில் நாராயணி பக்த சபா மஹாராஷ்டிரா கிளை சார்பில் நாலாசோப்ராவிலா நடைபெற்ற 1008- விளக்கு பூஜை விழாவில் தலைவர் எம் பி செல்லதுரை பொற்கரங்களால் சேவை ரத்னா விருதும்,

பத்தும் முத்தான மகாத்தான விருதாக தொடர் மக்கள் பணிக்கு பெரும் ஊக்கமாகவும் ஆக்கமாகவும் கருதுகிறேன் என்று தளபதி SK ஆதிமூலம் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,312FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular