HomeCinemaகமலுக்குக் கோவில்.. ஆண்டவரை நிஜமாகவே ஆண்டவர் ஆக்கிய ரசிகர்கள்! - அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?

கமலுக்குக் கோவில்.. ஆண்டவரை நிஜமாகவே ஆண்டவர் ஆக்கிய ரசிகர்கள்! – அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?

[ad_1]

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க நல்ல கலெக்சனை ஈட்டிவருகிறது. சினிமா வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே விக்ரம் திரைப்படம்தான் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் செய்துள்ள சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது,கமலின் ரசிகர்கள் சிலர், அவருக்குக் கோவில் கட்ட முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது ஏதோ விக்ரம் படத்தையொட்டி உருவான ஏற்பாடு அல்ல; கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாம். தற்போது விக்ரம் திரைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளதால் இந்த விபரம் தற்போது கவனத்துக்கு வந்துள்ளது.

எல்லாம் சரி, இந்தக் கோவில் தமிழகத்தில் எந்த ஊரில் கட்டப்பட்டுவருகிறது எனக் கேட்கிறீர்களா? அங்கேதான் ட்விஸ்ட்டே.  அதாவது, கமலுக்குக் கோவில் கட்டப்பட்டுவருவது நம்ம ஊரில் கிடையாதாம்.

kamqqகொல்கத்தாவில்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறதாம். கமல்ஹாசனைக் கொண்டாடும் விதமாக உருவாகிவரும் இந்தக் கோவில் கொல்கத்தாவில் உள்ள கிதிர்பூர் எனும் ஊரில் கட்டப்பட்டுவருகிறது. வருகிற துர்கா பூஜையன்று இந்தக் கோவில் திறக்கப்படவுள்ளதாகவும் திறப்பு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், அவள் ஒரு தொடர்கதையை ரீமேக் செய்து கபிதா எனும் பெங்காலி படத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் 2 கே கிட்ஸ்கள் பலர் நடிகர் கமல்ஹாசனை ஆண்டவர் என அழைத்துவரும் நிலையில், தற்போது அவருக்கு கோவிலே கட்ட ரசிகர்கள் முன்வந்துள்ளது வைரல் ஆகிவருகிறது.

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular