HomeCinemaSamantha : ஏன் இவ்வளவு கஷ்டம்? லைஃப் குறித்து கேட்ட சமந்தா! சத்குரு சொன்ன அட்வைஸ்!

Samantha : ஏன் இவ்வளவு கஷ்டம்? லைஃப் குறித்து கேட்ட சமந்தா! சத்குரு சொன்ன அட்வைஸ்!

இந்த உலகத்தை நீங்கள் இன்னும் நம்புகிறீர்களா? என்று நடிகை சமந்தா ரூத் பிரபுவிடம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுரை கூறியிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா. இவர், இப்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில் ஹாலிவுட்டின் கதவுகளையும் தட்டுகிறார். தனிப்பட்ட முறையில் அவரும் அவரது நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். அதன்பிறகு இரு பிரபலங்களும் திரையுலக வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர்.

சத்குரு சொன்ன அட்வைஸ்:

இந்த நிலையில், அண்மையில் சமந்தா சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆன்மீகத் தேடல் கேள்விகளைக் கேட்டார். அப்போது அவர், ஒருசிலருக்கு வாழ்க்கை ஏன் இவ்வளவு கோரமாக இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கடினமான சம்பவங்களை எல்லாம் அவர்கள் கர்மாவின் பலன் என்று எடுத்துக் கொண்டு அதை சலனமில்லாமல் அனுபவித்தே ஆக வேண்டுமா? நம் கர்மவினை நம்மைவிட்டு விலகுகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த உலகம் எனக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சத்குரு சொன்ன விளக்கம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. நீங்கள் இன்னமும் இந்த உலகம் உங்களுக்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இந்த உலகம் எப்பவும் நியாயமற்றது என்பதை நீங்கள் இந்நேரம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உலகம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்று விளக்கினார். மேலும் சமந்தாவின் கேள்வி ஒரு பள்ளிக் குழந்தையின் கேள்வி போன்றது என்றும் கூறினார்.

மண்ணைக் காப்போம்:

உலக அளவில் மண் வளத்தை பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு இன்று (மார்ச் 21) லண்டனில் இருந்து தொடங்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க ட்ரஃபல்கர் சதுக்கத்தில் 7 வயது சிறுமி கொடி அசைத்து இப்பயணத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி, அங்கு ஏராளமான மக்கள் திரண்டு சவால்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் சத்குருவுக்கு வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சத்குரு உரை நிகழ்த்தினார். இந்தப் பயணத்தின் 100வது நாளைக் குறிக்கும் வகையிலேயே சத்குரு சமந்தா உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது திருமணம்:

சமந்தா இப்படி ஆன்மிக கலந்துரையாடலில் இருக்க நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவரது தந்தை நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் வருங்கால மருமகளை எதிர்பார்த்து வருவதாகவும் டோலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த முறை நடிகர் தனது வருங்கால மனைவி திரையுலகில் இருந்து வரக்கூடாது என்று வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது.

முன்னதாக, சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இருவரின் பதிவிலும் சமந்தா, சைதன்யா என்ற வார்த்தை மட்டுமே மாறி இருந்தது. மற்றபடி ஒரே தகவலையே அவர்கள் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக தங்கள் நீண்ட நாள் நட்பு தொடரும் என்றும், இந்த கடினமான காலத்தில் தங்களின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் சுய உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ரசிகர்களிடம் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular