HomeCinemaதள தோனி தையாரிப்பில் தளபதி விஜய் நடிக்கவுள்ளாரா?

தள தோனி தையாரிப்பில் தளபதி விஜய் நடிக்கவுள்ளாரா?

[ad_1]

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார்.

அதுவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகிறது. தோனியைப் பொறுத்தவரை, கிரிக்கெட் தவிர பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வரிசையில் தற்போது சினிமா பக்கமும் கால் பதிக்க முடிவெடுத்துள்ளாராம் தோனி.

அந்த வகையில் சில டாப் நடிகர்களின் படங்களைத் தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, கோலிவுட்டிலிருந்து தனது திரைப் பயணத்தைத் தொடர ப்ளான் செய்துள்ள தோனி, இதற்காக நடிகர் விஜய்யை அணுகி, தனது படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளாராம்.

vijaydhoni1தோனியின் தயாரிப்பில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ள நடிகர் விஜய், அத்துடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, தோனியின் தயாரிப்பில் உடனடியாக நடிக்க முடியாது எனக் கூறியுள்ள விஜய், ஏற்கெனவே சில நிறுவனங்களுடன் தனது அடுத்த சில படங்களைக் கமிட் செய்துள்ளதால் இன்னும் ஓரிரு படங்களுக்குப் பின்னர் நடித்துக்கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளாராம்.

இப்படி ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் தற்போது பரவிவருகிறது. இது எந்தளவு உண்மை எனும் விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்பே தெரியவரும்.

q 0நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் தற்போது நடித்துவருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளாராம். விஜய்யின் 67ஆவது படமான இதை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular