HomeCinemaராட்சசன் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான் நடிகர் ஜெய்

ராட்சசன் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான் நடிகர் ஜெய்

[ad_1]

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களுள் ஒருவரான ஜெய் நடிப்பில் இந்த மாதம்  ‘பட்டாம்பூச்சி’ படம் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் இவர் ஒரு சைக்கோ கொலைகாரனாக நடிக்கிறார், இதில் சுந்தர்.சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பூ தயாரித்து உள்ளார்.  இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் ஹனி ரோஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  படத்திற்கான புரமோஷன் வேலைகளில் இறங்கி உள்ள ஜெய், சமீபத்திய பேட்டியொன்றில் தான் தவறவிட்ட சில படங்கள் குறித்து ஜெய் கூறியுள்ளார்.

222369 jaiபேட்டியில் அவரிடம் நீங்கள் தவறவிட்டுட்டு ஹிட் ஆன படங்கள் எதுவும் உள்ளதா என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்தவர், ஆம், அதுபோன்று நிறைய படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.  மேலும் கூறுகையில், ‘சுப்ரமணியபுரம்’ படத்தை தொடர்ந்து நான் நடிக்க வேண்டியது நாடோடிகள் படம், அதேபோல சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு ‘எஸ்எம்எஸ்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது.  சுப்ரமணியபுரத்தில் அதிகமாக தாடி வைத்துக்கொண்டு நடிக்க வேண்டியிருந்ததால் என்னால் உடனே மற்ற படங்களில் நடிக்க முடியவில்லை.  அதனையடுத்து ‘சுப்ரமணியபுரம்’ பட வெளியீட்டிற்கு பின்னர் கவுதம் மேனன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, அந்த சமயம் நான் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்ததால் அவரின் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

jai

பின்னர் கவுதம் மேனன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கும்போது தான், நான் அவரது இயக்கத்தில் தவறவிட்ட படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்பது தெரிய வந்தது.  அதனை தொடர்ந்து நான் தவறவிட்ட படம் ‘ராட்சசன்’, இப்படம் குறித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இயக்குனருடன் நான் பேசி வந்தேன்.  அந்த படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அந்த நேரத்தில் நான் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகிவிட்டேன், அதனால் அந்த படத்திலும் என்னால் நடிக்கமுடியாமல் போய்விட்டது என்று கூறினார்.

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular