[ad_1]
நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள டாடா படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இது தந்தை பாடும் தாலாட்டு பாடலாக படத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ள திரைப்படம் டாடா. இதனை கணேஷ் கே.பாபு இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தந்தையர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. தன் மகனுக்கு தந்தை பாடும் தாலாட்டு பாடலை போல உள்ளது இது.
இந்த பாடலை ஆஷிக் எழுதி உள்ளார். சத்ய நாராயணன், ஜென் மார்ட்டின், “கிடாகுழி” மாரியம்மாள், பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர்.