HomeCinemaஅஜித்துக்கு இத்தனை V வரிசைப்படங்களா?! – ஓர் அலசல்

அஜித்துக்கு இத்தனை V வரிசைப்படங்களா?! – ஓர் அலசல்

தமிழ்த் திரையுலகம் என்பது சென்டிமென்ட் அதிகமாக உலவுகின்ற ஓர் இடம். படத்தின் பூசையின்போது பிள்ளையார் சிலையை உடைப்பதில் தொடங்கி, படத்தின் முதல் பாடலை ஒருவரே தொடர்ந்து பாடுவது வரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சென்டிமென்ட் உண்டு. அஇத் நடித்த V வரிசைப் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சதுரங்கவேட்டை எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13 அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதில் பலரும் அறியாத ஒரு சிறப்பு என்னவென்றால் இப்படம் அஜித் நடித்த V வரிசை படங்களில் இது ஒன்பதாவது படம். இந்த V வரிசை படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் அஜித் நடித்த வி வரிசை படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

வான்மதி

1996 ல் வளர்ந்து வரும் நாயகனாக அஜித் இருந்த காலத்தில் வலிமை படம் போன்றே பொங்கல் அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் வான்மதி. இப்படத்தை அகத்தியன் இயக்கியிருந்தார். இந்தப்படத்தைத் தொடர்ந்து அஜித் அகத்தியன் கூட்டணியில் வெளிவந்ததுதான் மாபெரும் வெற்றிப்படமான காதல்கோட்டை.

வாலி

1999ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். இரட்டை வேடத்தில் அஜித் நடித்து அசத்தியிருந்த படம் இது. சிம்ரன், ஜோதிகா, விவேக் நடித்து தேவாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாயின.

வில்லன்

2002-ல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மீனா, கிரண்,கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்த  இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.

வரலாறு

கே. எஸ். ரவிக்குமார் – அஜித் கூட்டணியில் வில்லன் பட வெற்றியைத் தொடர்ந்து  2006 ல்  வெளியானது இத்திரைப்படம். ஏ.ஆர்.ரகுமானின் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாக வில்லனை ஓவர்டேக் செய்தது. அஜித்தின் நடிப்பில் பல பரிமானங்களை இப்படத்தில் பார்க்க முடிந்தது.

வீரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து 2014ல் வெளியானது இந்தத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில்  அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படத்திற்கு இசை அமைத்திருந்தது தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்தில் முழுக்க முழுக்க வேட்டி சட்டையிலும், வெள்ளை முடியோடும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

வேதாளம்

வீரம் வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா- அஜித் கூட்டணியில் 2015 ல் வெளியானது இப்படம். அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது.

விவேகம்

வீரம், வேதாளம் வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கூட்டணியில் 2017 ல் வெளியானது இப்படம். காஜல் அகர்வால்,விவேக் ஒபரோய் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விஸ்வாசம்

சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில்  2019 ல் வெளியானது இப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து, பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதில் இடம்பெற்ற கண்ணான கண்ணே படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
17,483FansLike
960FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular

You cannot copy content of this page