HomeCinemaஆண் குழந்தை.. மகிழ்ச்சியை பகிர்ந்த நகுல்.. இன்ஸ்டாவில் வைரலாகும் க்யூட் ஃபோட்டோ..

ஆண் குழந்தை.. மகிழ்ச்சியை பகிர்ந்த நகுல்.. இன்ஸ்டாவில் வைரலாகும் க்யூட் ஃபோட்டோ..

நடிகர் நகுல் மீண்டும் தந்தையாகியுள்ளார். நகுல், ஸ்ருதி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமானாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் நகுல். நடிகர் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். எதிர் காலத்தில் ‘எரியும் கண்ணாடி’ மற்றும் ‘வாஸ்கோடகாமா’ என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. ’டான்ஸ் vs டான்ஸ்’,  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 7’ ,  ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 8’ , ’பிக்பாஸ் ஜோடிகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தான் நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் கடந்த 2020ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். வாட்டர் பர்த் முறையில் முதல் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ருதி. அந்த குழந்தைக்கு அகிரா என பெயரிட்டனர். இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமானார். நகுல் ஸ்ருதி தம்பதியினருக்கு இன்று (ஜூன் 18) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையையும் அவர் வாட்டர் பர்த் முறையிலேயே பெற்றுக் கொண்டுள்ளார். குழந்தையின் புகைப்படத்தை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் நகுல், ஸ்ருதி, முதல் குழந்தை அகிரா மற்றும் புத்தும்புதிதாய் பிறந்த சிசு இருக்கின்றனர். சிசுவின் முகத்தைக் காட்டவில்லை. அந்த போஸ்ட்டில் ஸ்ருதி நகுல் சார்பில் பிரசவம் பார்த்த மருத்துவர் விஜயா கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்தத் தம்பதி தங்களது நடவடிக்கைகள், குழந்தையுடன் செய்யும் சேட்டைகள், தங்களது பர்சனல் விஷயங்கள்,உள்ளிட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular