HomeBusinessதங்கத்தில் முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.. முழு விவரம் இதோ!

தங்கத்தில் முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.. முழு விவரம் இதோ!

[ad_1]

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் 2022 ஜூன் 20 ம் தேதி  திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு விற்பனைக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை ஆகஸ்ட் 22 மற்றும் 26 ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என்றும் ரிசர்வ் பேங்க் தெரிவித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் மொத்தம் ரூ.12,991 கோடி மதிப்பிலான 27 டன்கள் விற்பனை செய்யப்பட்டது.

இத்திட்டம் தங்கத்திற்கான தேவையைக் குறைப்பதற்கும், தங்கம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுச் சேமிப்பில் ஒரு பகுதியை நிதிச் சேமிப்பாக மாற்றும் நோக்குடன் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு கிராம் யூனிட் கொண்ட தங்கத்தின் கிராம் மதிப்பிற்கு ஏற்ப பத்திரங்கள் கிடைக்கும். எஸ்ஜிபி திட்டத்தின் இன் தவணைக்காலம் எட்டு வருடம் ஆகும். 5வது வருடத்திற்குப் பிறகு திட்டத்தில் இருந்து வெளியேறும் விருப்பத்துடன் அடுத்த வட்டி செலுத்தும் தேதிகளில் செயல்படுத்தப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீடு ஒரு கிராம், ஒரு நபருக்கு அதிகபட்ச முதலீடு 500 கிராம் ஆகும்.

இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் 2022-23 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

இந்திய அரசாங்கத்தின் சார்பாக ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுகிறது, மேலும் இந்த பத்திரங்கள் தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFகள்), அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

SGB ​​குறைந்தபட்ச வரம்பு: முதலீட்டிற்கான குறைந்தபட்ச லிமிட் ஒரு கிராம்.

எஸ்ஜிபி (SGB) அதிகபட்ச வரம்பு: தனிநபர்களுக்கான அதிகபட்ச சந்தா வரம்பு 4 கிலோ, HUF களுக்கு 4 கிலோ மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் ஒரு நிதியாண்டுக்கு ஒத்த நிறுவனங்களுக்கு 20 கிலோ. 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியின் அடிப்படையில் SGB ரூபாய்களில் நிர்ணயிக்கப்படும்.

எஸ்ஜிபி (SGB) ​​வெளியீட்டு விலை: ஆன்லைனில் சந்தா செலுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு SGB களின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.50க்கும் குறைவாக வழங்கப்படுகிறது.

எஸ்ஜிபி (SGB) ​​வட்டி விகிதம்: முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி விகிதம் அரை ஆண்டுக்கு வழங்கப்படும்.

எஸ்ஜிபி-க்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL), தபால் அலுவலகங்கள் மற்றும் இந்தியாவின் இரண்டு பங்குச் சந்தைகள் (NSE மற்றும் BSE) மூலம் விற்கப்படுகின்றன.

KYC ஆவணங்கள்: அடையாளச் சான்று (ஆதார் அட்டை/பான் அல்லது TAN/பாஸ்போர்ட்/ வாக்காளர் அடையாள அட்டை)

பத்திரங்களை வழங்கும் வங்கிகள், முகவர்கள் அல்லது தபால் நிலையங்கள் மூலம் KYC செயல்முறை மேற்கொள்ளப்படும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17,483FansLike
1,334FollowersFollow
4,113SubscribersSubscribe

Most Popular