மும்பையில் அன்னத்தை திரைப்படம் முதல் காட்சி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது

Annaatthe_FDFS_Mumbai_Sion
4-Nov-2021 அதிகாலை  3,30 மணி தாதா சாகேப் பால்கே விருது பெற்ற உலக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அண்ணாத்த திரைக்காவியம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சயான் பி. வி. ஆர். சினிமாவில் ரசிகர்கள் முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நீண்ட ஆயுளுடன் வாழ "கணபதி ஹோமம் நடத்தி மேளம் தாளம் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டது,  72- வயதை குறிக்கும் வகையில் ரசிகர்கள் 72 அடி பேனருக்கு மலர் அபிஷேகம் செய்தனர். ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடாமல் திரையரங்கு முன்பும் ரஜினி தோன்றும் முதல் காட்சியில் 3- நிமிடம் நிப்பாட்டி மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாடினர். நலதிட்ட உதவிகள் அனைத்தும் போலீஸ் கெடுபிடியால் ஒத்தி வைக்க பட்டுள்ளது, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என மன்றத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த தீபாவளி ஏற்பாடு  மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர்  Dr. தளபதி SK. ஆதிமூலம் மாநில மகளிரணி தலைவி தலைமை ஆசிரியை லதா மணிமாறன்,  மாநில இளைஞரணி தலைவர் ரஜினி T. தனவேல், மாநில இணை செயலாளர்  M. மரிய சிலுவை,  மாநில துணை செயலாளர்கள் TK. ரஜினி மூர்த்தி,  சுவாமி நாதன்,.கவிஞர் B. M. ஆனந்த், மற்றும் நிர்வாகிகளால் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. 

No comments:

Post a Comment