ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரு. ஒரு லட்சம் நிவாரண பொருள் உதவி

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மும்பையில் இரண்டாம் அலையாக கொரானாவின் தாக்கத்தினால் அரசு கட்டுபாடுகளால்  ஊரடங்கு காலகட்டத்தையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்திற்கு மதிப்பிலான உணவுபொருள்கள் 200 குடும்பத்தினர்களுக்கு மாநில தலைவர் டாக்டர் தளபதி SK.ஆதிமூலம் தலைமையில் 11-05-2021 செவ்வாய் கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நிவாரண உதவிகள் மும்பை செம்பூர் வெஸ்ட், திலக் நகர் போலிஸ் ஸ்டேஷன் அருகில், ரோடு எண் -3, பாரதி நகர் சொசைட்டி, தலைவா ரஜினி இன்டர்பிரைசஸ், ரஜினி பால்வாடி, மாநில RMM தலைமை அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டது.
இதில் மகளிரணி நிர்வாகிகள் அம்பிகா சக்திவேல், மகேஷ்வரி மணி, ஷ்ரத்தா, நீலம், பரிநீதா, ராதா சேகர், அலுவலக நிர்வாகிகள் எஸ்.மாரியப்பன், எம்.ராமமூர்த்தி,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு கொரானா ஊரடங்கு நிவாரண பொருள் செம்பூர் ₹3,00,000/-மற்றும் தாராவி ₹1,25,000/-  இரண்டு பகுதியில் சேர்த்து மொத்தம் ₹4.25,000/- நான்கு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரத்துக்கு உண்டான நீவாரண பொருள்கள் வழங்கியது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment