மும்பையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரூ. 30000 கல்வி உதவி

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மும்பை செம்பூர் திலக் நகர் ரோடு எண் -3, ல் உள்ள போலிஸ் ஸ்டேஷன் அருகில் பாரதி நகர் சொசைட்டியில் உள்ள தலைமை அலுவலகமான ரஜினி பால்வாடியில் வைத்து மன்றத்தின் மாநில தலைவர் டாக்டர் தளபதி எஸ்.கே.ஆதிமூலம் அவர்களின் 47- வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்கு கல்வி கட்டணம் ₹30,000/-  வழங்கப்பட்து.
மும்பை மாண்கூர்டு லல்லுபாய் காம்பாவுண்ட்டில் வசித்து வந்த தமிழர் பிரேம்நாத் பெர்ணாண்டோ (வயது- 47) என்பவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக உடல்நிலை காரணத்தால் இறந்து விட்ட நிலையில் நிர்கதியாக இருக்கும் மனைவி அரசி பிரேம்நாத் பெர்ணாண்டோ மற்றும் பள்ளியில் கல்வி ஓராண்டு கட்டணம் ₹15,000/- விதம் இரண்டு மகள்கள் டினி, டொனி பெர்ணாண்டோ ஆகியோருக்கு ₹30,000/- ரொக்க பணமாக மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் மாநில தலைவர் டாக்டர் தளபதி  எஸ்.கே.ஆதிமூலம் வழங்கினார்.
இதற்கு முன்னதாக தனது 47- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இன்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் டி.தண்டாபாணி, ஜோ.சிவகுமார், எம்.ராமமூர்த்தி, எல்.வெங்கடேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் அம்பிகா சக்திவேல், மேபல் போல்ட்ரன், ராதா முருகன், மகேஷ்வரி மாரியப்பன், ராதா சேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 32-ஆண்டுகளாக கல்வி ஊக்க தொகை ஜாதி மத மொழி இன வேறுபாடு இன்றி வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment