மும்பை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஐம்பெரும் விழா

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது   கிடைக்கபெற உள்ளதையடுத்து பாராட்டு விழா, மாநில தலைவர் தளபதி எஸ் கே ஆதிமூலம் அவர்களுக்கு டாக்டர் விருது கிடைத்ததற்கு பாராட்டு விழா, பாராத ரத்னா அன்னல் அம்பேத்கர் ஜெயந்தி விழா, சிவாஜி மஹாராஜ் ஜெயந்தி விழா, தமிழ் புத்தாண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழாவாக நலிவடைந்த கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம், 200, சேலைகள், 200 முககவசம், 200 பேருக்கு சிக்கன் பிரியாணி உட்பட நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில இணை செயலாளர் எம்.மரிய சிலுவை, தலைமை தாங்க ரஜினி மணிகண்டன், ரஜினி சிவகுமார், டி தண்டாபாணி, ஜம்பு சண்முகம், மீனா சுப்பிரமணி, கவிதா முத்துகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகிக்க சத்திரபதி சிவாஜி மஹாராஜ், அன்னல் அம்பேத்கர் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் டாக்டர் விருது பெற்ற மாநில தலைவர் தளபதி எஸ்.கே.ஆதிமூலம் அவர்களுக்கு ஆள்உயர மாலை அணிவித்து தலையில் கிரீடம் சூட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment