நவிமும்பை உல்வே நோட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 5ஆம் ஆண்டு பொங்கல் விழா


நவிமும்பை உல்வே நோட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 5ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இந்த 2021 வருட பொங்கல் விழா கொரோனா காரணத்தினால் உல்வே, நவா, நவாகாடி, சிவாஜி நகர், கோப்பர் ஆகிய இடங்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கும் விழாவாக நடைபற்றது. இதில் சிறப்பு விருந்தினர் திரு.ராம்சேட் தாக்கூர் முன்னாள் சட்டமன்றம் உறுப்பினர்திரு.மகேந்திர கரத் (காங்கிரஸ்), திரு.ரவிந்திர பாட்டீல் (சாய் மந்தீர், வகால்), திரு.சமீர் பாட்டீல் (வகால் பஞ்சாயத்து தலைவர்), திரு.அமர் மாத்ரே (வகால் பஞ்சாயத்து துணைத் தலைவர்), திரு.சேத்தன் கரத் (பஞ்சாயத்து உறுப்பினர் வாஹல்)  திரு.ஹரிசந்திர மாத்ரே (உறுப்பினர் நவா பஞ்சாயத்து), திரு.மதன் பாட்டீல் (தலைவர் பி.ஜே.பி உல்வே நோட் 1), உல்வே நோட் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பெனியேல், செயலாளர் திரு.சுகுமார், பொருளாலர் திரு.செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மாசாணம், திரு.ராஜரத்தினம் மற்றும் அனைத்து கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment