மும்பையில் ரஜினி மக்கள் மன்றம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிறு டிசம்பர் 20-ம் தேதி இன்று மதியம் 12.30 முதல்  மாலை 4.30 மணி வரை செம்பூர் திலக் நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ரஜினி பால்வாடி மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து மாற்றுதிறனாளிக்கு மருத்துவ மொத்த செலவும் ஏற்றுக் கொள்ள பட்டது தொடர்ந்து தலைவரின் புகைபடத்தை தத்ரூபமாக வரைந்த மராத்தி இளம் மாணவி சலோனி  ரஜினி அவர்களுக்கு கொடுக்கும் படி மன்றத்திற்கு வழங்கிய நிகழ்வும் முக்கிய கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்க்கு மாநில தலைவர் தளபதி SK ஆதிமூலம் தலைமையில் மாநில மகளிர் அணி செயலாளர் தலைமை ஆசிரியை லதா மணிமாறன், மாநில இணை செயலாளர் எம். மரிய சிலுவை, மாநில இளைஞரணி செயலாளர் மாவீரன் ரஜினி தனவேல், மாநில துணை செயலாளர்கள் டி கே மூர்த்தி,  பிரபு தண்டபாணி ரஜினி சிவகுமார் ரஜினி மணிகண்டன் சி வேல்முருகன் இசக்கி முத்து சின்னதம்பி ஜம்பு சண்முகம்  ரமேஷ் உட்பட  30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அனாதையாக விடப்பட்ட  50 வயதுக்கு மேற்பட்ட மாரியப்பன் கோணார் என்பவருக்கு கை கால் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் குணமடைய அவருடைய மருத்துவ மெத்த செலவும்  மன்றத்தின் சார்பில் ஏற்க்கப்பட்டது.  தவிர வாட்சாப் பேஸ்புக்கில் வாயிலாக பரவி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகைபடத்தை வரைந்த மராத்தி இளம் மாணவி சலோனி என்பவர் மன்றத்தை தொடர்பு கொண்டு ரஜினி அவர்களுக்கு கொடுக்கும்படி வழங்கி கேட்டுக் கொண்டார் இக்கூட்டத்தில் கலந்து கண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது மேலும் வருகின்ற 31 -ம் தேதி  உலக தமிழர்கள் தவிர அனைவரும் எதிர்பார்க்கும் ரஜினி அவர்களின் கட்சி பெயர் சின்னம் கொகை திட்டம்பற்றிய செய்தி வெளியிட உள்ளதால் அது குறித்தும் பல முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


1 comment:

  1. Tamilnadu wants a political change. Mr.Rajanikanth will definitely give his best to his people. God bless you

    ReplyDelete