கேப்டன் தமிழ் செல்வன் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

தமிழ்நாட்டில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அது போல மராத்திய மாநிலத்தில் தமிழ் வழி பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பற்றி அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று மாணவர்களும் அவர்களது  பெற்றோர்களும் மிகுந்த மன வேதனையில் இருந்தனர். இந்நிலையில் மராத்திய மாநில சட்ட மன்றம் உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன் அவர்கள் தமிழ்நாடு அரசு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம்  கோரிக்கை வைத்தபின் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மும்பையில் பயிலும் அனைத்து தமிழ் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment