தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்க்கு இரா.கேப்டன் தமிழ்செல்வன் கோரிக்கை.

மும்பையில் பத்தாவது வகுப்பு தமிழ்வழி தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவிருந்த மாணவர்களின் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் பேசினார்.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்தது. ஆனால் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவிருந்த பத்தாம் வகுப்பு  தமிழ்வழிக்கல்வி  மாணவர்கள் பற்றி அறிவிப்பு ஏதும் வரவில்லை.  இதனால் மும்பை மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உழைச்சலுக்குள்ளாயினர்.
தமிழக மாணவர்களைப்போல் மும்பை மாணவர்களும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்று தமிழர் நலக் கூட்டமைப்பு, இந்தியப் பேனாநண்பர் பேரவை மற்றும் ஏராளமான தமிழ் அமைப்புகள் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டன.  
இந்நிலையில்  சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா. தமிழ்செல்வன் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சில தினங்களுக்குள்  நல்ல செய்தி தெரிவிக்கிறேன் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment