மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது மும்பை வாழ் தமிழர் நற்பனி மன்றம்


இன்று கொரோனா எனும்  கொடியநோயினால் உலகமே தேங்கி உறைந்து இருண்டு கிடக்கும் வேளையில் ஏழை எழிய மக்கள் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்து வருமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மும்பை வாழ் தமிழர் நற்பனி மன்றம் ஒர்லி (மும்பை) தலைமையிடமாக  கொண்டு செயல்படுகிறது ஆனாலும்  இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மும்பையில் அனைத்து பகுதிகளிலும் வசிக்கின்றார்கள் இதுபோக அயல்நாட்டிலும், அயல்மாநிலத்திலும் ஆங்காங்கே பரந்து விரிந்து வசித்து வருகிறார்கள், இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி அவர்களின் நிதி பங்களிப்புடன் ஏழைஎளிய மக்களுக்கு உணவு தானியங்கள், காய்கனிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் என பல்வேறு உதவிகளை மும்பை வாழ் தமிழர் நற்பனி மன்றத்தின் நிறுவன தலைவர் திரு.இரா.காந்தி அவர்கள்  ஏழைகளை கண்டறிந்து இந்த முழு ஊரடங்கு ஆரம்பமுதல் இன்றுவரை இடைவிடாது நிவாரணம் வழங்கிவருகிறார், அதேபோல் இன்று வழங்கிய நலப்பணிகள் மும்பை ஒர்லி முதல் அந்தேரி கிழக்கு தேசியநெடுஞ்சாலை வரை ஏழைஎளிய மக்களுக்கு நிவாரணம் நிறுவனத்தலைவர் திரு.இரா.காந்தி  அவர்கள் தலைமையில்  தோழர்கள்  திரு.கேசவன்  திரு.பகவதி, திரு.காளிமுத்து மற்றும் மும்பை சங்கர் (கொத்தரி) என பலரும் கலந்துகொண்டு  நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். மேலும் தொடர்ந்து இந்த மன்றத்திற்கு உதவிகரம் நீட்டிவரும் அனைவருக்கும்  கோடானகோடி  நன்றிகளை மன்றத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment