செம்பூர் கிளை சார்பில் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா




மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை செம்பூர் கிளை சார்பில் பசும்பொன்  திரு. உ. முத்துராமலிங்க தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது ஆண்டு குருபூஜை விழா ஆகியன செம்பூர் செல்காலனி சாலை சாய்பாபா நகர் பகுதியில் (17.11.2019) இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. செம்பூர் கிளை தலைவர் திரு. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் திரு. முருகன், பொருளாளர் திரு. ராமச்சந்திரன், திரு.கொம்பையா, திரு. எ. செல்லத்துரை, திரு.எல். மணி, திரு. ஜே. முத்துகுமார், திரு. K. K. பாண்டியன். திரு. முருகேசன், திரு. ஏ. முத்தையா (எ) தம்பிபாய், திரு. சந்திரகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் திரு. பி. எஸ். பட்டத்தேவர், மராட்டிய மாநில தேவர் முன்னேற்ற பேரவை பொருளாளர் திரு. எஸ். பழனித்தேவர், திரு. சக்தி சித்ரா, திரு. பி. எஸ். கே. எம். கார்த்திக் முத்துராமலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பகுதி மாநகராட்சி உறுப்பினர் திரு. ராஜேஷ் புல்வாரியா சமுதாய கொடியை ஏற்றி வைத்தார். செல்காலனி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தேவரின் பிரமாண்ட கட் அவுட் பீடத்தில் சமுதாய பெரியோர்கள் குத்து விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெற்றது. சாய்பாபா நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தேவரின் திரு உருவ படத்திற்கு ஆர்த்தி எடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில்   இருந்து    வருகை    தந்திருந்த    திரு.  என்.  எஸ்.  வேலு,  திரு. அக்னிப்பாண்டியன், திரு. பழனி, திரு. சுபாஷ், திரு. மலையாண்டி, திரு. கூடலிங்கம், திரு. மாடசாமி, திரு. எம். முத்தையா, திரு. சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள்,  மற்றும் ஆண்டவர், திரு. பி. பாலசுப்பிரமணியன், திரு. கே. மணிகண்டன்,   திரு. கே. சின்னதுரை, திரு. சி. சுப்பையா, திரு. ஆர். விவேக், திரு. வள்ளியூர் முருகன், திரு. எஸ். மாரி, திரு. குமார், திரு. ராமச்சந்திரன், திரு. செல்வம், திரு. வாணுமாமலை, திரு. முருகானந்தம்  உள்ளிட்டோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.


No comments:

Post a Comment