தாராவி கிராஸ் ரோட்டில் கழிவுநீர் குழாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி
தாராவி பகுதியில் கடந்த பதினைந்து இருபது வருடங்களாக பராமரிப்பின்றி இருந்த தாராவி கிராஸ் ரோட்டை முன்னால் கவுன்சிலர் வக்கீல் திரு.சேக் அவர்களின் ஆலோசனைபடி தற்போதைய 188 வார்டு கவுன்சிலர் திருமதி.ரேஷ்மா பானு அவர்களின் முயற்சியால் தாராவி கிராஸ் ரோடு காமராஜ் பள்ளியில் இருந்து மஹா கணேஷர் கோவில் வழியாக, தாஸ்பிடி ஷாப் வரைக்கும் தற்போது கழிவுநீர் குழாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளது.

600 mm இருந்து 800 mm விரிவுபடித்தி தனிதனியாக குழாய் பதிப்பது மற்றும் தரமான தார்சாலை அமைத்து கொடுப்பதற்கான பணி தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்றுவருகிறது. பணி விரைவாக நடைபெற சாலை பராமரிப்பு பணிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment