கருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...!தமிழ் மண்ணின் மீதும் மக்களின் அளப்பரிய பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்த, நான் பெரிதும் நேசித்த கருட சித்தர் மறைந்த செய்தி கேட்டு பெரிதும் துயருற்றேன்.

இந்நாட்டில் நடக்கும் அரசியலை உற்றுநோக்கி அதன் சீரழிவை வெளிப்படையாகப் பேசி அதற்கான மாற்று அரசியலாக நாம் முன்வைக்கும் அரசியலை முன்மொழிந்து நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைகளின் பங்கெடுத்து, என் மீது பெரும் நம்பிக்கைகொண்டு வாழ்த்திய ஐயா சித்தர் அவர்களது மறைவு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

பெருமதிப்பிற்குரிய ஐயா கருட சித்தர் அவர்களுக்கு  எனது சார்பிலும், நாம் தமிழர் கட்சி மற்றும் வீர தமிழர் முன்னணி  சார்பாகவும் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

-சீமான்
நாம் தமிழர் கட்சி

No comments:

Post a Comment