வாழ்வதற்கு காற்று தேவை ! அதற்கு மரங்கள் தேவை !!
மண்ணை உழுபவருக்கு பெண் கொடு -
மரத்தை நடுபவருக்கு விருது கொடு -

பொது வேலையில் ஈடுபட சொல்லி கொடு -
பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு -

தண்ணீரை சேமிக்க  சொல்லி கொடு -
தாமதித்தால் பாலைவனமாகும் என சொல்லிவிடு

தாய் தந்தைக்கு நல்லதை செய் -
அவர்கள்
தளர்ந்த பின் நீ தளராமல் செய் -

உனக்காக ஒரு மரம் வை -
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை -
இதை உன் சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை -

பிள்ளை பிறந்தாலும் மரம் வை -
பேர் வைத்தாலும் மரம் வை -
மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை -
நாட்டுக்காக நாலு நூறு மரம் வை -

இச்செயலை நண்பர்களையும் செய்ய சொல்லி  வை -

இதை ஊராரிடமும் சொல்லி வை -

பசுமையை பற்றி சொல்லிக்கொடு -
அதை உருவாக்க இப்பவே முயற்சியை  எடு -

வாழ்வதற்கு
காற்று தேவை - அதற்கு
மரங்கள்  தேவை -
இதுவே நமக்கும், தலைமுறைக்கும்  தேவை -

குளத்தை வெட்டி  வை -
மரத்தை நட்டு வை -
நிலத்தை உழுது வை -
தண்ணீரை சேமித்து வை -

பல்லுயிரும் செழிக்க
பசுமை ஆகும் என்று சொல்லிவை!!!!
நல்லவைகளை முற்பகல் செய்யின்....பிற்பகல் விளையும்.....
அல்லவைகளை முற்பகல் செய்யின்....முற்பகலே விளையும்....

No comments:

Post a Comment