வாழ்த்துக்கள் திரு. சுந்தர் அண்ணா

இன்னும் பல பதவிகள் உங்களை தேடி வர மனமகிழோடு வாழ்த்துக்கள் ..!!!
தென்னிந்திய தேசிய வாத காங்கிரசில் தமிழ் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில்  வாழ்த்துக்கள் எங்கள் வீட்டு செல்லமே..!
இந்த பதவி கிடைத்தவுடன் மராட்டிய மாநிலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பாக பேசப்பட வைக்கும்..!
இந்த மும்பை மாநகரமே உங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும்
எங்கள் அண்ணாவே..!
தராசின் தட்டுகளைப் போல் எப்போதும் சமநிலையில் சமாதானம் செய்யும் எங்கள் அஹிம்சை வாதியே..!

திரியில் வந்து தெறித்து விழும் அன்பை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் எங்கள் உண்மை நிபுணரே..!
உங்கள் மீது பொறாமை கொண்ட இமைச்சாளரங்களின் இடுக்கிப் பிடிகளைச் சமாளிக்கும் எங்கள் சாமான்யரே..!
வம்பு பேசி சீண்டுபவரை உங்கள் நகைச்சுவையில் கலாய்க்கும் எங்கள் கோமானே..!
சாந்தமாக  பேசி பேசி நித்தமும் கலக்கும் எங்கள் வித்தகரே..!
பல வரலாற்றுகளை அத்தனையும் தன் கைக்குள் வைத்திருக்கும்
எங்கள் ஜித்தரே..!
தட்டிக் கொடுத்து நட்புறவு வளர்க்கும் எங்கள் பண்பாளரே..!!!
வெளிப்படையான கருத்துக்கள் கொடுத்து எங்களையெல்லாம்
அண்ணாந்து பார்க்க வைக்கும் எங்கள் மேதையே...!
உங்களை நம்பி வருவோரை உதவி கரம் நீட்டி மகிழ்விக்கும் நல்ல மனிதரே...!
உங்களுக்கு இன்னும் பல பதவிகள் நாடி உங்களை தேடி வந்து சாதனை
படைக்க வாழ்த்துக்கள்!!
நீங்கள் வாழ்க..!  உங்கள் செயல் வளர்க..! வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
உயர் திரு. சுந்தர் அண்ணா வாழ்த்துக்கள்..!
எங்களுடன் சேர்ந்து என் ஊடக, சகோதரர் சகோதரிகளே, தோழர் தோழிகளே, பெரியோர் சிறியோர்களே, மாணவர் மாணவிகளே, ஆன்றோர் சான்றோர்களே, புரட்சியாளர் போறாளிகளே, மற்றும் என் தொப்புள் கொடி உறவுகளே அண்ணாரை

வாழ்த்தி போற்றுங்கள்...!
வாழ்த்தி பாராட்டுங்கள்...!
வாழ்த்தி புகழுங்கள்...!
வாழ்த்தி மகிழுங்கள்...!
வாழ்த்தி பாடுங்கள்...!
வாழ்த்த வாருங்கள்...!

இவண்,
உங்கள் அன்புடனும்..!
உங்கள் ஆதரவுடனும்..!
உங்கள் ஆசியுடனும்..!
உங்கள் மும்பை தமிழன்..!
உங்கள் உண்மை தமிழன்..!
ஆர்.கே.சிவபாரதி.
(குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்)

No comments:

Post a Comment