மனித உரிமைப்போராளி மற்றும் சீமான் சந்திப்பு

ஆஸ்திரேலியா நாட்டை சார்ந்த மனித உரிமைப்போராளி Ashleigh அவர்கள் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து உரையாடினார். 

ஆஸ்திரேலியாவில் மற்றும் உலகம் முழுக்க வாழும் தமிழ் அகதிகளை இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கும் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் ஐநா சபைகளில் தொடர்ந்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ் இனப்படுகொலைக்கு பொதுவாக்கெடுப்பு மற்றும் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பது அவரது தீர்க்கமான நிலைப்பாடு . 

ஆண் பெண் சமத்துவத்திற்காக மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடி வரும் ஆஸ்லி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 20க்கு 20 பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியுள்ள செயலை வெகுவாக பாராட்டினார். ஆஸ்திரேலிய கட்சிகளே அவ்வாறு செய்வதில்லை என்றார். 

நாம் தமிழர் கட்சி ஆட்சியின்  செயல் திட்ட வரைவை வெகுவாக பாராட்டிய அவர் , இத்தகைய நீண்ட கால திட்டங்களே இப்போதைய தேவை. இதுவே தமிழ் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றும் என்றார். 

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆகச்சிறந்த திட்டங்களையும் படித்த இளைஞர் சக்தியையும் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியை மக்கள் காலம் தாழ்த்தாமல் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும் என்றார். அது. தான் அடித்தட்டு மக்களை முன்னேற்றும் ஒரே வழி என்றார் ்
அவரால் ஆன ஒத்துழைப்பை நாம் தமிழர் கட்சிக்கும் தமிழ் இனத்திற்கும் அளிப்பதாக உறுதியளித்தார் .

 -ஜீவாடானிங்

No comments:

Post a Comment