நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பாடல்கள் இசைவட்டு வெளியிடப்பட்டது

05/01/2019 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பாடல்கள் 10 இன எழுச்சி முழக்கம் என்ற தலைப்பில் பாடல் இசைவட்டு வெளியிடப்பட்டது

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கி இயக்குனர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது தமிழன் தொலைக்காட்சி ஐயா கலைகோட்டுஉதயம் அவர்களால் பெற்றுக்கொள்ள பட்டது.
பாடல் வெளியீட்டு விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியபோது,,, கட்சியின் வளர்ச்சிப்பாதைக்கு இந்த பாடல்கள் தேவைப்படுகிறது,,,,, ஆனால் என்னை உயர்த்தி உருவாக்கிய பாடல்வரிகளை எனக்கு ஏற்றுகொள்ள விருப்பம் இல்லை தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் ஒருவர்மட்டுமே தமிழ் இனத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தலைவர். அதனால் தலைவரை பற்றியே பாடல் இசைகளை நாம் உருவாக்கவேண்டும் என்று பெருமையாக கூறினார்.

இந்த இன எழுச்சி முழக்க பாடல்களை என் தம்பி கனக மணிகண்டன் (நாம் தமிழர் கட்சியின் மராத்திய மாநில பொறுப்பாளர்) பெரும் பொருட்செலவில் உருவாக்கி இருப்பதை நான் மிகவும் வரவேற்கிறேன் என்றும்! வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

10 பாடல்களை துள்ளியமாக இசையமைத்து நல்ல படைப்பை உருவாக்கித்தந்துள்ள இசையமைப்பாளர் 'இசைதமிழன்' ஸ்டீபன்ராஜ் அவர்களுக்கும் பாடல் வரிகளை உருவாக்கித்தந்துள்ள கவிஞர்கள் இளைய கம்பன்,கபிலன்,யுகபாரதி,புலவர் மறத்தமிழன் வேந்தன் மற்றும் பாடலை பாடிய அனைத்து பாடகர் பாடகி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல்,தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன்,களஞ்சியம் மருத்துவர் சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்பாண்டியன், குருதிகொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா மு ப செ நாதன்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில், தலைமை பொறுப்பாளர் பாக்கியராஜ்,தலைமை செயலாளர் செந்தில்குமார்,சாரதி புலவர் மறத்தமிழ்வேந்தன், மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் மா கென்னடி மராத்திய மாநில இளைஞர் பாசறை செயலாளர் அமரன்,இனைச்செயலாளர் மோகன்,மும்பை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வென்னிலா மற்றும் கேரளா மாநிலம் மூனாரில் இருந்து கனேஸ்குமார்,ராஜ்குமார்,ஜெயபிரகாஷ், மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் திரைப்பட உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இவன் :-நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் மும்பை

No comments:

Post a Comment