இன எழுச்சி முழக்கம் பாடல் வெளியிட்டு விழா

அன்பான உறவுகளுக்கு வணக்கம்!!,,
நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் மும்பையில் இருந்து "மராத்திய மாநில பொறுப்பாளர்" கனக மணிகண்டனின் வேண்டுகோள்,

அன்பு உறவுகளே!,, நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க 10 பாடல்களை என்னோட ஆக்கத்தில் உருவாக்கி இருக்கிறேன்,


இந்த ஆக்கத்தில் உதவியாக தம்பி

சி அமரன் (நாம் தமிழர் கட்சி மராத்திய மாநில இளைஞர் பாசறை செயலாளர்) தம்பி கி மோகன் (நாம் தமிழர் கட்சி மராத்திய மாநில இளைஞர் பாசறை இனைச் செயலாளர்) இவர்கள் இருவரும் பங்களிப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இந்த பாடல்களை ஆக்கமாக்க வழி காட்டியாக இருந்தவர் அண்ணன் அன்புத்தென்னரசு (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள்,,,,
அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் மும்பை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்,,,,

சென்னையில் என்னோடு ஒத்துழைப்பாக இருந்த அண்ணன் அரிமா மு நாதன் (குறுதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கும் நன்றியை தெறிவித்துக்கொள்கிறோம்,,,

நான் கிட்டதட்ட 6 மாதகாலமாக மும்பையில் இருந்து சென்னை என்று ஒவ்வொரு மாதமும் 15 நாட்க்கள் தங்கும் விடுதி எடுத்து என் தொழிலை (ஆடிட்டிங் அலுவலகம்)என் தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு என் மனைவி மூன்று குழந்தைகள் இவர்களையும் மும்பை என் வீட்டில் விட்டுவிட்டு இந்த படைப்பை நான் உருவாக்கி இருக்கிறேன்,,,

முதலில் சாதாரனமாக இந்த பாடல்களை உறுவாக்கிவிடலாம் என்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களிடம் அனுமதிபெற்றேன்,,, ஆனால் வேலைகளை தொடங்கியபிறகுதான் தெரிந்தது எவ்வளவு பெரிய வேலையை எடுத்து செய்திரிக்கிறோம் என்று,,

இசையமைப்பாளர் அண்ணன் இசைத்தமிழன் என்ற ஸ்டீபன்ராஜ் அவர்கள் ஒத்துழைப்பில் மிக பிரமாண்டமாக இந்த பாடல்களை உருவாக்கி உள்ளார்,, அவர் முதலில் சொன்னார் சும்மா கம்போசிங் செய்து பாடல்களை செய்துவிடலாமா என்று! வேண்டாம் அண்ணா நல்ல தரம்வாய்ந்த பாடல்களை உருவாக்கனும் என்றேன்! அவரும் எல்லாம் லைவாக இசையை தயார்செந்து படைத்துள்ளார்,

நல்ல பாடகர்கள்,,,அதைவிட நல்ல கவிஞர்கள் அண்ணன் இளைய கம்பன்,ஐயா கபிலன்,அண்ணன் யுகபாரதி,புலவர் மறத்தமிழன் மாமா, அண்ணன் இசைத்தமிழன் இவர்கள் அனைவரின் வரிகளில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

மிக பொருட்செலவில் அதாவது என் தகுதிக்குமீரி செலவில் இந்த பாடல்களின் படைப்பை உருவாக்கி இருக்கிறேன்,

அதனால் அன்பு உறவுகளே,,,, அழைப்பிதழில் எல்லோரின் பெயர்களை போடுவதர்க்கு சாத்தியம் இல்லை! அழைப்பிதழில் பெயர்கள் முன்னும் பின்னுமாக அமைந்திருக்கலாம் வடிவமைக்கும் போது, சில முக்கியமானவர்களின் பெயர்கள்கூட வராமல் இருந்திருக்கலாம், எதையும் பொருட்படுத்தாமல்,
இந்த பாடல் இசை வெளியீட்டு விழா எனக்கான வெளியீட்டு விழா இல்லை! என்பதை மனதில்கொண்டு,
நம் இனத்திற்க்கும், நாம் தமிழர் கட்சிக்குமான விழா என்பதை நீங்கள் கருத்தில் கொண்டு கலந்துகொள்ளுங்கள்.

நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் மும்பை சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் எல்லோரும் ஒன்று கூடுவோம் என்று அன்போடு அழைக்க்கிறோம்,,

நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் (மும்பை)

உங்களோடு என்றும்
கனக மணிகண்டன்,
(நாம் தமிழர் கட்சி மராத்திய மாநில பொறுப்பாளர்)

No comments:

Post a Comment