மிக விரைவில் வருகிறது அரசி

அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மனிதன் சுகமாக வாழ நல்ல இயற்கையான சுத்தமான சுகாதாரமான காற்றும்   சுத்தமான சத்தான உணவுகளும் தேவை! 

சுத்தமான காற்று என்பது நம் கையில் இல்லை. ஆனால் இயற்கையான  சத்தான உணவை தேர்வு செய்வது நமது கையில் தான் இருக்கிறது.

நாம் இயற்கை சார்ந்த சுத்தமான உணவை உண்ண  முடிவு  செய்தாலும்  அதற்கு தேவையான பொருட்கள்  எங்கே எப்படி கிடைக்கும் என்று நமக்கு தெரிவது  இல்லை. அப்படி கிடைத்தாலும் அது சுத்தமானதா என்று நம்மால் உறுதி படுத்த முடியாது. குறிப்பாக நாம் எல்லா உணவுகளிலும் பயன் படுத்தும் எண்ணைகள்  அனைத்தும் இப்போது கலப்படம் உள்ளதாகத் தான் சந்தைகளில் கிடைக்கிறது.

அந்த குறையை  நீக்கும் வகையில் அன்றும் இன்றும் என்றும் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான  ஏ.பி.மணி& சன்ஸ் நிறுவனம் அரசி என்ற பெயரில் மும்பையில் முதன்முறையாக செம்பூர் பகுதியில்  இயற்கையான முறையில் மரச்செக்கில்  எண்ணை எடுக்கும் ஆலையை துவங்க உள்ளது.
எங்கள் நிறுவனத்தில் சுத்தமான தரமான கடலை, எள், தேங்காய்  பயன்படுத்தி உங்கள் கண் முன்னால் எண்னை எடுத்துக்கொடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட எண்ணையில் தின்பண்டங்களும் (Snacks)செய்து கொடுக்கப்படும்.

மேலும் இரசாயனக் கலவை இல்லாத நாட்டுச் சர்க்கரையும் கருப்பட்டியும் கிடைக்கும். அதில் செய்யப்பட்ட பலகாரங்களும் கிடைக்கும். 
மேலும் இயற்கை உரம்(Organic) பயன்படுத்தி உற்பத்தி செய்த அனைத்து வகையான உணவு பொருட்களும் கிடைக்கும்.
கூடவே அனைத்து வகையான நாட்டு மருந்துகளும் கிடைக்கும்.

அன்பு உறவுகளே! மும்பையில் வாழும் நமது தமிழ் உறவுகள் இயற்கை சார்ந்த நல்ல உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி நலமுடன் வாழ-
சுத்தமான எண்ணை
சுவையான உணவு
சுகமான வாழ்க்கை
-என்ற நோக்கத்துடன் மிகவிரைவில் நாங்கள் துவங்க இருக்கும் இந்த மரபுசார் தொழிலுக்கு உங்கள் ஆசியையும் ஆதரவையும்  அன்புடன் வேண்டுகிறோம்.

முகவரி:
(A.P. Mani Natural Foods)
ஏ.பி.மணி இயற்கை உணவுகள்
கடை எண்- 87 காமராசர் சாலை, செல்காலனி, செம்பூர், மும்பை-71


No comments:

Post a Comment