தமிழ் தேசியம்

தமிழ் தாய் ஈன்ற என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்

தமிழர்களே தமிழ் தேசியம் என்றால் என்ன..?
இந்த உலகம் தோன்றியது முதல் இன்றுவரை இந்த பூமியின் ஒட்டு மொத்த வரலாற்றை  இன்றைய அறிவியல் கூட சொல்ல முடியாது..!
ஆனால் இந்த உலகத்தின் அனைத்து வரலாற்றையும் மிகவும் துல்லியமாக கணித்து சொன்னது நமது ஆதி பாட்டன்கள்தான்..!
இந்த உலகில் முதல் முதலில் தோன்றிய இனமும் தமிழ் இனம்தான்..!

ஆனால் இன்று நாம் எப்படி வாழ்கிறோம் நமது வாழ்வாதாறம் எவ்வாறு உள்ளது...?
வாழையடி  வாழையாக நாம் நாட்டு மாட்டை  பயன்படுத்தி உழவு செய்து யானை கட்டி போரடித்து நம்  களஞ்சியத்தில் சேர்த்தோம்..!
ஆனால் தமிழர்களிடம்  இன்று களஞ்சியம் எங்குமே காணவில்லை..!

என்ன காரணம், ஏன் காணவில்லை என்று, இன்றைய தமிழன் நினைத்து பார்த்ததுஉண்டா..?

நமது ஆதி காலத்து உணவு பழக்க வழக்கங்கள் எல்லாம் எங்கே போனது..?
எனக்கு தெரிந்து எங்கள் வீட்டில் எனது பாட்டி (என் தகப்பனாரின் தாயார்) எங்களுக்கு தன் கைப்பட தின் பண்டங்கள் செய்து தருவது வழக்கம், ஆனால் இன்று நமக்கு புது புது உணவு வகைகளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில்  இருந்து நமது நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்..!

இதுபோன்று பல்வேறு தொழில் நுட்பத்தை இங்கு இறக்குமதி செய்தது யார்..?
இன்று நமது மக்கள் சுய தொழிலில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறி இன்று அன்னியர் கட்டுப்பாட்டில் வந்துவிட்டார்கள்..!
ஆகையால் நாம் இன்று அடிமையாகத்தான் இருக்கிறோம்..!

லி பாஸ்கர் தமிழன்

No comments:

Post a Comment