மும்பையில் ரஜினிகாந்த் 69 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மராத்திய மாநில தலைமை ரஜினி ரசிகர் மக்கள் மன்றம் தாராவி 12.12.2018  புதன் கிழமை தலைமை மன்றம் சார்பாக உலகம் போற்றும் மா மனிதர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தினத்தைமுன்னிட்டு காலை 8 மணிக்கு மட்டுங்கா முருகன் கோவிலில் சிறப்பு பூஜையும் அதன் பின் மான்கூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது பிறகு 12 மணிக்கு மட்டுங்கா திரையரங்கில் அதன் உரிமையாளர் நம்பிராஐன் மாநிலச்செயலாளர் S. ராஜேந்திரன் இருவரும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள் பின் கேக் அனைவருக்கும் வழங்கப்பட்டது உடன் மாநில துணைச்செயலாளர்கள் கிருஸ்டோபர், கலைச்செல்வன்,  மகளிர் அணிசெயலாளர் அட்லின், அருள், அர்ஜுன், பிச்சுமணி, வில்லியம், விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.No comments:

Post a Comment